தேவதை அவள் தானோ - ஜொலிக்கும் த்ரிஷா
ஹோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் விதவிதமான உடைகளில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கருப்பு மற்றும் கோல்டன் மஞ்சள் கலரில் ஹெலன் மாடல் லாங்க் டாப் அணிந்திருந்தார். இது அவரை தேவதை போல் காட்டியது. இதற்குப் பொருத்தமான டார்க் ஐலைனர், மஸ்காரா முகத்தோற்றத்தை வசிகரமாக்கியது.
இலை அமைப்பு போன்ற கோல்ட் காதணிகள் ஆடையோடு கூடிய த்ரிஷா அழகைக் கூட்டியது. கைகளில் பிரேஸ் லைட் மற்றும் கழுத்தில் சிறிய மணிகளால் ஆன மெல்லிய செயின் அணிந்திருந்தார்.
நீல வண்ண குர்தா மாடல் உடையில் த்ரிஷாவின் அழகு பளீரெனத் தெரிந்தது. மேட்சிங்காக உடையின் நிறத்திலேயே டிசைனர் காதணிகள், சாதாரண ஹேர் ஸ்டைலுடன் ஸ்டைலிஷாக தோற்றமளித்தார்.
முகத்திற்கு லேசான மேக்கப், ஐலைனர், மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக் போட்டிருந்தார். இந்த லுக்கில் அவரது அழகான தோற்றம் இனம் புரியாத வசிகரத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
வெள்ளை நிற சில்கி கிம்னோ ரோபி ஆடையில் த்ரிஷாவின் அழகு மென்மையாகக் காட்சியளித்தது. ஆடைக்கு ஏற்றாற்போல் மேக்கப் மற்றும் கண்களுக்கு ஐலைனர் என அசத்தல் லுக்கில் உள்ளார்.