ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தநாள்...!

ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளை ஒட்டி பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

கடந்த 1994ல் உலக அழகியாக வலம் வந்ததில் இருந்து, அனைவருக்கும் பரிட்சயமான முகமாக உள்ளார். உலகளவில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

கேன்ஸ் விழாவில் நடுவர் மன்ற உறுப்பினர் என பல சிறப்புகளையும் தட்டிச் சென்றுள்ள இவர், பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இருப்பினும், அவ்வப்போது தமிழ் படங்களிலும் அழகாக வந்து, அனைவரையும் நலம் விசாரித்து கிறங்கடிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக அனைவரையும் கட்டிப்போட்ட இவர், ஊமை ராணியாகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இவரின் அழகிய வளர்ச்சியால், 'உலக அழகி ஐஸ்வர்யான்னு நெனப்பு மற்றும் பிப்ட்டி கேஜ் தாஜ்மஹால்' என கூறும் அளவுக்கு அழகால் அனைவரையும் வசீகரித்துள்ளார்.

இதற்கேற்ப இவரின் உடைகளும் பார்த்து பார்த்து, அழகிய நேர்த்தியுடனும், பிரமாண்டமாகவும் வடிவமைக்கப்படுகின்றன; அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருவது வாடிக்கையாக உள்ளது.