மினி ஸ்கர்ட்டில் ஜான்வி கபூரின் அசத்தல் லுக்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிரபலங்களின் மகள் என்பதையும் தாண்டி, சொந்த முயற்சியில் கால் பதிக்க தீவிரமாக போராடி வருகிறார் இவர்.

'குஞ்சன் சக்சேனா' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் அனைவருக்கும் பரிச்சயமான முகமாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், விதவிதமான பேஷன் உடைகளில் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மினி ஸ்கர்ட், பிளேசர், லெஹங்கா, டிசைனர் புடவை என விதவிதமான உடைகளில் பேஷன் களஞ்சியமாக, இவரின் உடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

'புல்' மற்றும் 'மினி ஸ்கர்ட்' உடைகளுக்கு இவர் முக்கியத்துவம் அளிக்கிறார். சமீபத்தில் வெள்ளை நிற மினி ஸ்கர்ட்டில் அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஜான்வி.

ரசிகர்கள் இதற்கு லைக்குகள் அள்ளித்தெளிப்பது மட்டுமின்றி, கலவையான கமெண்டுகளையும் கூறி வைரலாக்கி வருகின்றனர்.