கஸ்தூரிமானிடம் இருந்து கிடைக்கும் கஸ்தூரி குறித்து அறிவோமா…
நானமா என்ற மான் இனம், கஸ்தூரி என்ற திரவத்தைச் சுரப்பதால், கஸ்தூரிமான் என்றும் அழைக்கப்படுகிறது. இமயமலைப்பகுதிகளிலும், கிழக்காசிய நாடுகளிலும், இக்கஸ்தூரிமான் வாழ்கிறது.
குழந்தைகள் மருந்து மட்டும் அல்ல, சிறந்த நறுமணப் பொருட்களுள் ஒன்று, கஸ்துாரி. இதற்கு மணம் தருவது, 'மஸ்க்கோன்' எனப்படும் பொருள்.
இது நெடுங்காலம் நிலைத்திருக்கும், மணம் ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. மங்கலான கருமை கலந்த, சிவப்பாக சிறு சிறு மணிகளாக இருக்கும்.
கஸ்துாரி மானின் வயிற்றில் சுரக்கும் சுரப்பியிலிருந்து இது கிடைக்கிறது. அதனால், இதன் விலையும் அதிகம்.
அசாம் கஸ்துாரி, முதல் தரமானது, கருப்பாக இருக்கும். நேபாள நாட்டின்
கஸ்துாரி, நீல நிறத்தில் இருக்கும். காஷ்மீர் கஸ்துாரி, கோதுமை நிறத்தில்
இருக்கும்.
தலை வலி, கபம், ஜன்னி, காய்ச்சல் போக்கும். உடல் பளபளப்பைத் தரும், வசியத்திற்கும், பெண்களின் நாத விருத்திக்கும் ஏற்றது.
கஸ்துாரிக்கு வெப்பமாக்கும் தன்மை உண்டு. வலிகளை நீக்கும், வியர்வை பெருக்கும், சிறு நீர் பெருக்கும். பாம்புக்கடி நஞ்சை நீக்கும் மருந்துகளில் கஸ்துாரி இடம் பெறும்.
வெற்றிலையுடன் கஸ்துாரி சேர்ப்பதன் மூலம், கர்ப்பிணி பெண்கள் நலமடைகின்றனர். கர்ப்ப வலி, கர்ப்ப வாயு முதலியவைகளுக்கு வெற்றிலையுடன் சேர்ந்த கஸ்துாரி சிறந்த நிவாரணம் தருகிறது.
கஸ்துாரி அளவு மீறினால் அதுவே விஷமாகி விடும். மலச்சிக்கல், உடல் சூடு, ரத்தக்கேடு, பித்தம் மிகுதி போன்றவைகளை உருவாக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.