பட்டுப்புடவைக்கேற்ற அழகான பிளவுஸ் டிசைன்கள்..!
மற்ற புடவைகளை விட, பட்டு புடவைகளுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உள்ளது.
இந்த பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் விதமாக அதற்கு ஏற்ற பிளவுஸ் தேர்வுகளும் மிக முக்கியமான ஒன்றாகும்.
நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் பட்டு புடவையின் டிசைனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
பிளவுஸ்சின் நிறம் பட்டு புடவையின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாறுபட்டு இருக்க கூடாது.
நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் எளிமையாக இருக்க வேண்டுமா அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டுமா என்று தீர்மானம் செய்யுங்கள்.
புடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்றவாறு பிளவுஸ் டிசைனும் இருக்க வேண்டும்.
தடிமமான கைகளை உடையவர்கள் கை இல்லாத பிளவுஸ்களை தவிர்ப்பது நல்லது.
கைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் பட்டு புடவைக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.