குழந்தைக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எலும்பு முறிவை சரிசெய்ய முடியுமா?
இயற்கையாக எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தை கட்டி வைத்தால் 6 வாரத்தில் எலும்பு சேர்ந்து விடும்.
இதை சாதகமாக எடுத்துக் கொண்டு பலர் நாட்டுக்கட்டு முறையை செய்து வருகின்றனர்.
அவ்வாறு சேரும் எலும்பு ஏற்கனவே இருப்பதை போல் சேராமல் சிறிது விலகினாலும், அதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
குழந்தைகளுக்கு 12 வயது வரை எலும்பு முறிவு ஏற்பட்டால் வேகமாக சேர்ந்து விடும்.
அதனால் டாக்டரின் அறிவுரை இல்லாமல் நாட்டு வைத்தியம் முறையில் கட்டுவதால் எலும்பின் இணைப்பு பாதிக்க வாய்ப்பு உள்ளது.
எலும்பு முறிந்து அதிகமாக விலகியிருந்தால் மட்டும் தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இல்லையென்றால் மாவு கட்டு முறையில் சரி செய்ய முடியும்.
கைக்குழந்தைகளை ஒரு கையில் துாக்குவது, கால்களை பிடித்து இழுப்பது போன்றவற்றை செய்யக் கூடாது. இதனால் குழந்தைகளின் எலும்பு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.