மழைக்காலத்தில் பரவும் நோய்கள் என்னென்ன?
மழைக்காலத்தில் பரவலாக காய்ச்சல், சளி, தும்மல், இருமல், தலைவலி, உடல்வலி, மூக்கடைப்பு, சைனஸ் போன்ற நோய்கள் வரும்.
ஆஸ்த்மா போன்ற பிரச்னை உள்ளவர்க்கு அது மேலும் தீவிரமடையும்.
ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் 'டிராகன்குளோசிஸ்' என்னும் உருண்டைப்புழுக்கள் அதிகம் இருக்கின்றன.
மீன் பிடிக்க, குளிக்க தண்ணீரில் இறங்கினால் இப்புழுவால் தோல் நோய் ஏற்படும்.
ஈக்களாலும் அதிக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. பழங்களை வாங்கினால் உடனடியாக சாப்பிட வேண்டும். நாளாகிவிட்டால் அழுகி, ஈக்கள் வரும், நோய் வரும்.
கால் விரல் இடுக்குகளில் அரிப்பு, கொப்புளம் ஏற்படுத்தும் இன்டர்டிரைகோ என்னும் பூஞ்சை நோய் பரவ வாய்ப்புள்ளது.
மேலும் மஞ்சள் காமாலைக்கு காரணமான ஹெபடிடிஸ் ஏ,ஈ வைரஸ்கள் அதிகம் பரவும்.
தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களும் பரவும்.