கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதிகமாக தண்ணீர் குடிங்க !
கோடை காலத்தில் வழக்கத்தைவிட, கூடுதலாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சுரக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது அவசியம்.
திரவ உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
நன்னாரி சர்பத், வெண்ணெய் எடுத்த தாளித்த நீர் மோர், இளநீர், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறுகள், உடல் வெப்பத்தை வெகுவாகத் தணிக்கும்.
ஒரு டீஸ்பூன் பாதாம் பிசினை எடுத்து, அரை டம்ளர் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை, வெறும் வயிற்றில் குடித்தால் உடல் குளுமை பெறும்.
தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது என்பது சித்த மருத்துவர்களின் அட்வைஸாகும்.