பர்த்டே பாய் அதர்வா..!
அதர்வாவின் 32 வது பிறந்தநாள் இன்று.
நடிகர் முரளியின் மகனான அதர்வா முரளி தனது 21 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
2010ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதர்வா பல விருதுகளை குவித்த படம் பாலா இயக்கிய 'பரதேசி'. இப்படத்தில் ஒரு அப்பாவியாக அடிமை வேடத்தில் நடித்தார். இது பார்வையாளர்களிடமிருந்து அவருக்கு அதிக பாராட்டுக்களைப் பெற்றது.
சாம் அன்டன் இயக்கிய '100' என்ற அதிரடி திரைப்படத்தில் அதர்வா ஒரு காவலாராக நடித்தார். அதர்வா மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா 'நிறங்கள் மூன்று' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அதர்வாக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக் தெரிவித்து வருகின்றனர்.