அருகம்புல்லின் ஆரோக்கிய நன்மைகள்
அருகம்புல்லில் நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், வைட்டமின் 'சி' உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதன் துளிர் இலைகள், தண்டுகள், வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கள் கொண்டவை.
சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், நெஞ்சுச்சளி, கண்களில் ஏற்படும் தொற்றுநோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகியவைக்கு நிவாரணம் தரும்.
இதிலுள்ள மேனிட்டால், சேப்போனின்ஸ் சத்துகள் சிறுநீரை பெருக்க உதவுகின்றன.
அருகம்புல் சாறு சற்று காரமுடையது; கசப்புடையது; உஷ்ணத்தன்மை வாய்ந்தது. பசியை தூண்டும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
இது நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும். குமட்டல், வாந்தியை தனிக்க உதவும். மேலும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் உதவும்.
ரத்தத்தை சுத்திகரித்தும் தேவையில்லாத நச்சுக்கழிவுகளை வெளியேற்றும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாரடைப்பை தவிர்க்க உதவுகிறது.
நாட்டு வெல்லம் சேர்த்தும், கரும்புச்சாறுடன் கலந்தும் அருகம்புல் சாறை அருந்தலாம்.