கழுத்து வலி நீங்க சில டிப்ஸ்...
நீண்ட நேரம் ஒரே இடத்தில், தவறான தோற்றநிலையில் உட்கார்ந்திருப்பது, வண்டி ஓட்டுவது, குனிந்தபடியே படிப்பது, போன் பார்ப்பது என பல வேலை செய்வதால் கழுத்து வலி ஏற்படுகிறது.
உங்களுக்கு கழுத்து வலி ஏற்பட்டால் நீங்கள் உட்காரும் மற்றும் படுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
வலியில் அவதிபடுவோர் கட்டாயமாக நீண்ட நேரம் வண்டி ஓட்டுவதை தவிருங்கள்.
தலையின் மொத்த எடையை கழுத்து தாங்கி நிற்கிறது. இப்போது செல்போன் பயன்படுத்த குனியும் போது, அதிக எடையை தாங்குகின்றது.
இதனால் கழுத்தின் தசைகள் வலிக்க தொடங்குவது மட்டுமல்ல, நரம்புகளும் அழுத்தப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
அதனால் எப்போதும் குனிந்தபடியே போன் பார்ப்பதை தவிருங்கள்.
மன அழுத்தத்தினாலும் கழுத்து வலி ஏற்படும். உங்களுக்கு எதனால் மன அழுத்தம் என்று கண்டறிந்து, மன அழுத்தத்தை நீக்க முயற்சியுங்கள்.
ஒரு காட்டன் டவலில் ஐஸ் கட்டிகளை போட்டு சுற்றி, அதை வழி இருக்கும் இடத்தில் இரண்டு நிமிடம் ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, ஒரு துணியில் எப்சம் உப்பை கட்டி, தண்ணீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம்.