'மாமா குட்டி' புகழ் கன்னுக்குட்டி இவானாவின் அசத்தல் ஸ்டைல்!
'சொல்லுங்க மாமா குட்டி...' என ஒரே ஒரு டயலாக்கின் மூலம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார் கன்னுக்குட்டி இவானா.
நாச்சியார் படத்தில் அறிமுகமானாலும், லவ்டுடே படத்தின் மூலம் அனைவருக்கும் பரிட்சயமாகியுள்ளார். 'சொல்லுங்க மாமாக்குட்டி' என்ற டயலாக்கை ரிங்டோனாக வைக்காத இளசுகளே இல்லை எனலாம்.
சமீபத்தில், நீல நிற சாட்டின் காலர் சட்டை மற்றும் மஞ்சள் நிற சில்க் லெஹங்காவில் ஸ்டைலிஷாக இவானா பதிவிட்ட புகைப்படத்துக்கு, லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் சவிநிதி வடிவமைத்த இந்த சாட்டின் சட்டையில் காலர் இருப்பது கூடுதல் சிறப்பாகும்; இவானாவுக்கு ஸ்டைலிஷாகவும், மாடர்ன் தோற்றத்தையும் அளிக்கிறது இந்த காலர் சட்டை.
லெஹங்காவில் கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட பூக்கள் வசீகரிக்கிறது. திருமண விழாக்களுக்கு அணியும் வகையில் இந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருமணத்துக்கு முந்தைய மெஹந்தி விழாவுக்கு, இன்றைய மாடர்ன் யுவதிகள் தாராளமாக அணியலாம்.
அலங்காரக் கற்கள் பதிக்கப்பட்ட மகாராணி ஹாரம், காதணி என பாரம்பரிய தோற்றமும், மணிக்கட்டில் பெரிய வாட்ச் என இன்றைய டிரெண்டும் கலந்து ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார் இவானா.