கேன்ஸ் விழாவில் அசத்தலான உடைகளில் மிருணாள் தாக்கூர்
இந்தாண்டுக்கான 76வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடக்கிறது.
அதில், சிவப்புக் கம்பளத்தில் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர் அசத்தலான உடைகளில் காட்சியளித்தார்.
முதல் நாளில் பிரெஞ்ச் ரிவியாராவில் கருப்பு நிற பளிங் ஜாக்கெட் மற்றும் லேஸ் பேன்ட்டுடன் அழகிய நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார் மிருணாள்.
தொடர்ந்து, இரண்டாம் நாள் அழகிய க்ரே நிற புடவையில், பாரம்பரியம் கலந்த மாடர்ன் லுக்கில் உலா வந்தார். ஃபுல்குனி மற்றும் ஷேன் பீக்காக்கின் மணிகளால் செய்யப்பட்ட புடவையில் மிருணாள் ஜொலித்தார்.
அனாமிகா கன்னா வடிவமைக்கப்பட்ட 'ஹூட் கோச்சர்' ஆடையில் மிருணாள் கேன்ஸின் மூன்றாவது நாளைத் தொடங்கினார்.
இந்த உடைக்கு ஏற்ப பவுண்டேஷன்,கண்ணில் ஸ்மோக்கி ஐ ஷேடோ மற்றும் லிப் ஸ்டிக் போட்டு ஹாட் லுக்கில் அசத்தினார்.
மேலும், நேற்று மிருணால் ஒரு செக்ஸியான வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.
இவர் அணிந்து வந்த கவுனானது ஃபல்குனி ஷேன் பீக்காக் வடிவமைத்தது. இந்த கவுன் பல கட்-அவுட்டுகளைக் கொண்டதால், இவரது கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது.
தன் இன்ஸ்டா பக்கத்தில் மிருணாள் தாக்கூர் இந்த உடைகளில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.