ரத்த கொதிப்பு மாத்திரை சாப்பிடுபவர்கள் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?
ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் தாராளமாக பல் சிகிச்சை செய்து கொள்ளலாம் என பல் டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சில பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சிகிச்சை நாளன்று காலையில் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். காலை உணவு உட்கொள்ள வேண்டும்.
சிகிச்சைக்கு முன் ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் அனைத்து சிகிச்சையும் செய்யக் கூடாது. ஏனெனில் நீண்ட நேரம் சிகிச்சை பெரும் பொழுது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
எனவே இரண்டு அல்லது மூன்று நாட்களாக பிரித்து சிகிச்சையை செய்து முடிக்க வேண்டும்.
அதே போல் பல் எடுத்ததும் அவ்விடத்தில் ரத்தக்கசிவு முற்றிலும் நின்றுவிட்டதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.