விதவிதமான ஆடைகளில் அசத்தும் 'சோழப் பெண்கள்'

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' நாளை மறுதினம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக 'சோழர்களின் பயணம்' என படத்தின் புரமோஷன் பயணத்தை படக்குழுவினர் மேற்கொண்டனர்.

அதில் த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா ஆகியோர் விதவிதமான டிசைன்கள், வண்ணங்களில் அணிந்த ஆடைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன.

குறிப்பாக இத்தனை வயதிலும் த்ரிஷா இவ்வளவு அழகாக இருக்கிறாரே என ரசித்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டவர்கள் நிறைய பேர்.

குந்தவையின் அசத்தலான ஆடைகள்!

பெரும் ரசிகர்களைக் கவர்ந்த பூங்குழலி.