சருமம் ஜொலிக்கும்: பச்சை பால், மஞ்சள் இருந்தால் போதும்!

பல தனிமங்கள் நிறைந்த மஞ்சள், வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்த பச்சை பாலுடன் கலக்கும்போது, டோனராகச் செயல்பட்டு சருமத்திற்கு பல் நன்மைகளைத் தருகின்றன.

இது சருமத்தின் ஆழமான சுத்திகரிப்புக்கான பாரம்பரிய மற்றும் பழமையான வீட்டு வைத்தியம் ஆகும். தினமும் ஃபேஸ் வாஷ் செய்ய இதைப் பயன்படுத்தலாம்.

மஞ்சள், பால் கலவையானது சருமத்தில் தேய்த்து சிறிது நேரத்திலேயே நன்கு இறுக்கமாகும். இது உங்கள் முக சுருக்கங்களைபடிபடியாக குறைய செய்யும்.

முகத்தில் உள்ள இறந்த சருமம் மற்றும் நச்சுகளை நீக்க பால் மற்றும் மஞ்சள் சேர்த்து ஸ்க்ரப் தயார் செய்யலாம். 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை 2 டேபிள் ஸ்பூன் பாலுடன் கலந்து, எளிதில் ஸ்க்ரப் பேஸ்ட்டை உருவாக்கவும்.

பால் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் ஆகும். அதனால் வறண்ட சருமத்திற்கு, பச்சை பால் மற்றும் மஞ்சள் சேர்த்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைக்கும்.

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த கலவை சருமத்தில் உள்ள முகப்பருக்களை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துவிடும்.

இந்த கலவையை தினமும் இரவு தூங்கும் முன் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவவும். பொலிவான மற்றும் களங்கமற்ற சருமத்தைப் பெறலாம்.

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை சருமத்தில் சிவத்தல், வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும்.