கேன்ஸ் திரைப்பட விழா:மீண்டும் மீண்டும் அசத்தலான ஆடையில் சாரா அலிகான்!
2023ம் ஆண்டுக்கான 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் மீண்டும் மீண்டும் சாரா அலிகான் அழகான உடையில் சிவப்பு கம்பளத்தை அலங்கரிக்கிறார்.
சாரா அலி கான் கேன்ஸ் விழாவின் முதல் நாளில் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹெங்கா சோளியில் வந்திருந்தார்.
இரண்டாம் நாளில் கலந்து கொள்ளும் போதும் இரட்டை டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஸ்வா வடிவமைத்த கருப்பு மற்றும் வெள்ளை நிற புடவையை அணிந்து வந்திருந்தார்.
இந்த ஃப்யூசன் புடவைக்கு மேட்சிங்காக இவர் ஹால்டர் நெக் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.
முக்கியமாக இந்த உடைக்கு இவர் அணிந்திருந்த கருப்பு வெள்ளை ஸ்ட்ரிங் நெக்லேஸ் மற்றும் சிறிய காதணி, இவரது அழகை கூட்டி காட்டியது.
இந்த விழாவில் மற்றொரு கருப்பு நிற உடையில் சாரா அசத்தினார். இவர் ஆடை தங்க நிறத்தில் இதய வடிவிலான அலங்காரத்துடன் கூடிய கருப்பு நிறத்தில் இருந்தது.
சாரா அலி கான் மூன்றாவது நாளில் சில்வர் நிற பளபளக்கும் ஆடையில் சிவப்பு கம்பளத்தில் ஒய்யரமாக நடையிட்டார்.
ரேச்சல் கில்பரட் என்ற பேஷன் பிராண்ட்டைச் சேர்ந்த க்ளோஸ் நெக் மற்றும் தரை நீள சில்வர் நிற கவுனை அணிந்திருந்தார். இந்த ஆடை முழுக்க முழுக்க மின்னும் மணிகளால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.
இவர் பவுண்டேஷன்,கண்ணில் ஸ்மோக்கி ஐ ஷேடோ, சிவப்பு லிப் ஸ்டிக் மற்றும் கூந்தலை கொண்டை போட்டிருந்தது அழகை மேலும் கூட்டியது.