வியர்வை தொல்லையா? போக்க டிப்ஸ்...
கோடை காலத்தில் அதிகமாக, 'மேக்-அப்' போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிக, 'மேக்-அப்' வியர்வையை அதிகபடுத்தும்
அக்குள் பகுதியில், முடி இல்லாமல் பார்த்து கொண்டாலே வியர்வை நாற்றம் ஏற்படாது
கோடை காலத்தில் இருமுறை குளிப்பது புத்துணர்ச்சியைத் தரும். குளித்து முடித்ததும் தரமானப் பவுடர் அல்லது சிறிதளவில் சென்ட் பூசுங்கள்
குளிக்கும் நீரில் ஓரிரு துளிகள் சென்ட், டியோடரண்ட் அல்லது சந்தனம் சேர்த்துக் கொண்டால் உடல் கமகமக்கும்.
செயற்கை இழை ஆடைகளைத் தவிர்த்து, காட்டன் மற்றும் மெல்லிய உடைகளை அணிவித்தல் நல்லது
நெல்லிக்காயை தண்ணீரில் சேர்த்து அரைத்து, உடலில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவி வர நல்ல பயன் கிடைக்கும். மேலும் வியர்க்குரு வராது.
சிறிதளவு தண்ணீரில் புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து, மூடி வைக்க வேண்டும். ஆறியதும், அந்தத் தண்ணீரை குளிக்கும் நீருடன் கலந்து உபயோகித்தால், வியர்வை வாடை வீசாது.
காலை நேரத்தில் பெப்பர்மின்ட், வெட்டிவேர், ஜாஸ்மின் போன்றவற்றில் ஒன்றையும்; இரவில் லேவண்டர் ஆயிலையும், ஐந்து துளிகள் கலந்து குளிக்கலாம்.