சீனியர் சிட்டிசன்கள் வெயில் காலத்தில் பத்திரம்
முதியவர்களுக்கு தோல் சீக்கிரம் காஞ்சு போயிடும். இதனால தோல் பராமரிப்புல கொஞ்சம் கூடுதலா கவனம் வேணும்
தாகம் வரும் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. பாட்டில் கையோடு வைத்து அடிக்கடி குடிக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
குளித்த உடன், லேசான ஈரம் இருக்கும் போதே மாய்ஸ்ச்சுரைசர் தடவிக்கொள்ளலாம். ஈரப்பதம் மிக முக்கியம்.
தளர்வான மெல்லிய காட்டன் துணிக்கு மாறிவிட வேண்டும்.
வேர்க்குரு, அரிப்பு, வறட்சி பிரச்னை இருக்கும் என்பதால், ஒரு நாளைக்கு இரண்டு முறை உடம்புக்கு மட்டும் குளிக்கலாம்.
அதிக பழங்கள், காய்கறி, மோர், இளநீர் எடுத்துக்கொள்ளலாம்.
காலை, 11 முதல் மதியம் 3-4 மணி வரை வெளியிடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. செல்ல வேண்டியிருந்தால் தண்ணீர், குடை, தொப்பி மறக்காதீர்கள்.
சருமத்தை பாதுக்க வெளியில் செல்லு போது சன் ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள்.