தமன்னாவின் அழகின் ரகசியம் இதுதான்...!

சமீபத்தில், நடிகை தமன்னா சருமப் பராமரிப்பு குறித்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன் அழகின் ரகசியம் குறித்த 'டிப்ஸ்'களை பகிர்ந்துள்ளார்.

எனது சரும அழகின் ரகசியத்தை தற்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவயதில் இருந்தே நான் இதை பின்பற்றி வருகிறேன்; என் அம்மா இதை கற்றுக் கொடுத்தார்.

நடிக்கத் துவங்கிய பின், ஏராளமான ரசாயனங்களை மேக்கப்புக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, சருமப்பராமரிப்பில் இயற்கையான பொருட்களையும் சேர்த்துள்ளேன்.

இதற்கு, சந்தனம், தேன் மற்றும் காபித்தூள் போதும். இவற்றை தேவைக்கேற்ப சிறிதளவு எடுத்து, நன்றாக கலக்கிக்கொண்டு, முகத்தில் விரல்களால் தேய்த்து உலர விடவும்;

10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி முகத்தை சுத்தப்படுத்தவும். இப்போது உங்களின் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கக்கூடும்.

இந்த பேஸ் பேக்கை பயன்படுத்திய பின்னர், எனது சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதை நான் உணர்கிறேன். நீங்களும் கட்டாயமாக இதை முயற்சித்து பாருங்கள்' எனக் கூறியுள்ளார்.