அழகோ அழகு.. கைக்கொடுக்கும் பாரம்பரிய டிப்ஸ்...!
ஆரோக்கியத்துடன் மட்டுல்ல அழகாகத் தோற்றமளிப்பதிலும் பலருக்கும் ஆர்வம் அதிகம்.
அழகு என்பது பியூட்டி பார்லர் போனால் மட்டும்தான் வரும் என்பது பலரது திடமான எண்ணம்.
சிலருக்குக்கோ, பார்லர்களில் பிளீச்சிங், பேசியல் செய்ய பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களால் தீராத அலர்ஜி.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் சரும அழகை வீட்டிலிருந்தபடியே மேம்படுத்தலாம்.
இவ்ளோ சிக்கனமான்னு யாராவது கேட்டா, பாரம்பரியம் தான் எப்பவுமே 'பெஸ்ட்'ன்னு பெருமையா சொல்லிக்கலாம்.
பயத்தமாவு, மஞ்சள் தூள் மற்றும் எழுமிச்சை சாறை நன்றாக கலக்கி சருமத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிக்கவும். வாரம் இருமுறை செய்தால் வறட்சி நீங்கி சருமம் பளபளக்கும்.
உருளை கிழங்கு சாறு, சர்க்கரை, எழுமிச்சை சாறு தலா 1 ஸ்பூன் குழைத்து உடலில் கருமையாக உள்ள இடத்தில் பூசி வர, நாளடைவில் கருமை மறையும்.
பிரசவத்துக்கு பின் வயிற்றில் உள்ள கோடுகள் மறைய கற்றாழை, பப்பாளி, சந்தன பவுடர், பன்னீர், பாதாம் அல்லது தே.எண்ணெய், பாலாடை தலா 1 டீஸ்பூன் எடுத்து தூங்கும் முன் வயிற்றில் பூசலாம்.
நெல்லிக்காய், தான்றிக்காய், வெட்டிவேர், ரோஜா இதழ், மருதாணி, கறிவேப்பிலை, கரிசலாங்கன்னி, செம்பருத்தி, புதினா- இந்த பொடி தலா 10 கிராம் எடுத்து சூடான தே.எண்ணெய்யில் கலந்து ஊறவைத்து, தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும்; கருப்பாக மாறும்.