நாம் ஃபேஷனாக கருதும் டாட்டூவை புனிதமாக என்னும் பழங்குடியினர்.

பெரும்பாலும் இளைஞர்கள் தங்களை மாடன் யுவன் யுவதி களாக காட்டிக்கொள்ள டாட்டூ போட்டுக் கொள்ளும் மோகம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் காட்னா எனினும் பச்சை குத்தும் மரபு பல பகுதிகளில் காணப்படுகிறது. இதை முதலில் தோற்றுவித்தது மத்திய பிரதேசத்தை சேர்ந்த மலைத்தொடர்கள் மற்றும் பரியா இன மக்கள்.

பச்சை குத்துவதில் பல வடிவங்கள் உள்ளன. அந்த வடிவங்கள் அடையாளக் குறிகள் ஆக செயல்படுகிறது.

அந்த வடிவங்கள் ஒரு தனி நபரையோ இனத்தையோ அல்லது குழுவையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கு பெரிதும் உதவுகிறது.

மலர், வடிவியல், கோலம், குதிரை, மயில், பழங்குடிப் புராணங்கள், யானை, மற்றும் அதில் சவாரி செய்வது போல் பச்சை குத்திக் கொள்வர்.

இதுபோன்று பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் ஆண்களை விட பெண்களிடம் அதிக அளவில் காணப்பட்டது.

பெரும்பாலான இளம் வயது பெண்கள் கண்கள் மற்றும் தாடை பகுதிக்கு அருகே புள்ளிகள் அல்லது குதிரை கடிவாளம் போன்ற அரை வட்ட வடிவத்தை பச்சை குத்திக் கொண்டனர்.