வாலன்டைன் டே வாரம்... நாளை ஆரம்பம்! இதோ டைம் டேபிள்..
பிப்., 7 - ரோஸ் டே : இத்தினத்தில் விருப்பமானவர்களுக்கு ரோஜா கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். காதலுக்கு சிவப்பு ரோஜா, நட்பிற்கு மஞ்சள் ரோஜா,
பிப்., 8 - ப்ரப்போஸ் டே: நமக்கு பிடித்தவர்களுக்கு மனதிற்குள் உள்ள காதலை, அன்பையும் வெளிக்காட்டும் நாள்.
பிப்., 9 - சாக்லேட் டே : இந்த நாளில் நமக்கு பிடித்தவர்களுக்கு சாக்லேட் பரிசாக கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்.
பிப்., 10 - டெடி டே : டெடி பியர் பொம்மையைப் பிடித்தவர்களுக்குப் இத்தினத்தில் பரிசளித்து காதலை வெளிப்படுத்தலாம்.
பிப்., 11 - பிராமிஸ் டே : காதலில் ஒருவருக்கொருவர் உறுதிமொழி செய்து மிகவும் அவசியம். : இந்த நாளில் காதலோடு பிரியாமல் இருப்போம் என்று உறுதிமொழி செய்கிறார்கள்
பிப்., 12 - ஹக் டே : அன்பை பரிமாற கட்டிப் பிடித்தல் ஒரு அழகான வெளிப்பாடாகும். இந்த நாளில் காதலர்களை மட்டுமல்ல நண்பர்களை, குடும்ப உறுப்பினர்கள் ஹக் செய்து அன்பை பரிமாறலாம்.
பிப்., 13 கிஸ் டே - காதல் மொழியில் முத்தத்திற்கு முக்கிய இடமுண்டு. இந்த தினத்தில், உங்கள் அன்பானவர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பை காட்டலாம்.
பிப்., 14 - வாலன்டைன்ஸ் டே : நிறைவாக வந்தது காதலர் தினம். அன்பை வெளிப்படுத்தும் நாள். வாலன்டைனை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.