உலகின் பல்வேறு மதங்களில் செழித்தோங்கும் விநாயகரின் புகழ்..!
இன்று விநாயகர் சதுர்த்தி உலகம் முழுக்க வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கணேஷா, கணபதி எனப் பல பெயர்களில் விநாயகர் அழைக்கப்படுகிறார்.
இவருக்கு இந்தியா மட்டுமின்றி இஸ்லாமிய நாடுகள் உட்பட பல நாடுகளில் சிலைகள் உள்ளன. விநாயகப் பெருமானின் உலகப் புகழ் குறித்து பார்ப்போம்.
கிழக்காசிய நாடுகள் மட்டுமின்றி, இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, மத்திய தரைகடல் நாடுகளில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன; ஆண்டுதோறும் விநாயகர் வழிபாடு களைகட்டுகிறது.
விநாயகரை இந்துக்கள் மட்டுமின்றி பெளத்த மதம், திபெத்திய பெளத்தம், ஜப்பானிய பெளத்தம், ஜைன மதம் ஆகியவற்றிலும் பல்வேறு பெயர்களில் கிழக்காசிய குடிமக்கள் வழிபடுகின்றனர்.
யானை முகம் கொண்ட விநாயகருக்கு மேற்கண்ட மதங்களில் பல்வேறு உடைகள், ஆபரணங்கள் மற்றும் வடிவங்கள் கொடுக்கப்பட்டன.
மொரீஷியஸ், மாலத்தீவு, மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விநாயகரின் உருவச் சிலைகள் பிரபலமானது.
ஜைன மதத்தில் எமனை எதிர்த்துப் போராடும் உக்கிர கடவுளாகப் பார்க்கப்படும் விநாயகர் குபேரனுக்கு இணையான அதிர்ஷ்டம் வாய்ந்த கடவுளாக உள்ளார்.
விநாயகர் உலக நாடுகளின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இறை பக்தர்களின் ஒருமித்த கடவுள் என்றால் அது மிகையில்லை.