குழந்தைகள் பல் நலனில் முக்கியமாக கவனிக்க வேண்டியதென்ன?

பொதுவாக வீடுகளில், பெரியவர்கள், குழந்தைகள் ஒரே பேஸ்ட்டை பயன்படுத்துகின்றனர்.

14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், கட்டாயம் புளூரிடேடட் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்.

இரண்டு வேளை பல் துலக்குவதை கட்டாயமாக்க வேண்டும்.

ஆறு முதல் 14 வயது வரை, பால் பற்கள் விழுந்து முளைத்துக் கொண்டு இருக்கும்.

முதலில் கடவாய் பல் தான் முளைக்கும்; அது தெரியாமல் பால் பற்கள் என நினைத்து அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.

பால் பற்களாக இருந்தாலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவை சரியாக இருந்தால் தான், புதிதாக முளைக்கும் பல் சரியாக வரும்.

பெற்றோர் பல் சுத்தமும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.