மாணவர்கள் ஏன் காலை உணவை தவிர்க்க கூடாது?
கல்வி கற்கும் போதும் சரி, வேலைக்கு சென்ற பிறகும் சரி, நினைவாற்றல் இன்றியமையாதது. அதை மேம்படுத்த குழந்தைகள் எக்காரணத்தை கொண்டும் காலை உணவை தவிர்க்க கூடாது.
அதை தவிர்ப்பது அவர்களின் ஞாபக சக்தி, மனநிலை மற்றும் கவனத்தை பாதிப்பதுடன், உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
எனவே, காலை உணவை தவிர்க்காமல், சத்து நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு நேரங்களில் மாணவர்களின் மூளைக்கு சீரான குளுக்கோஸ் தேவை, நீரோட்டத்துடன் இருக்க வேண்டும். இவை அனைத்தும் வழங்கும் உணவுகளை அந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம்.
படிக்கும் மாணவர்களின் காலை உணவில், பாதாம் போன்ற 'நட்ஸ்' வகைகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
காலையில் அவித்த முட்டை மற்றும் 'மல்டி கிரைன்' ரொட்டி எடுத்துக் கொள்ள, அதிலுள்ள புரோட்டின் மற்றும் கோலின் சத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
ஊறவைத்த 5 - 7 பாதாம் பருப்பை தோலை நீக்கிய பின் காலையில் சாப்பிட்டு வருவது, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.