வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்புக்கான சிகிச்சைகள் என்ன?

வெரிகோஸ் வெயின்ஸ் என்ற நரம்பு சுருள் பாதிப்பு கால்களில் ரத்த நாளங்கள் வீங்கி, சுருண்டு கொள்வதால் ஏற்படுவது.

நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்களை அதிகமாக பாதிக்கிறது.

கால் வலி ஏற்படுதல், கால் கனமான உணர்வு வருதல் அறிகுறிகளாகும்.

பாதிப்புகள் அதிகரித்தால் காலப்போக்கில் கால் தோலின் நிறம் கருப்பாக மாறி காலில் புண், ரத்தக்கசிவு பிரச்னைகள் வரும்.

நோய் பாதிப்பை தவிர்க்க தினசரி உடற்பயிற்சி, உடல் எடை குறைத்தல், நீண்ட நேரம் நின்று வேலை செய்வதை தவிர்த்தல் அவசியம்.

ஓய்வு எடுக்கும் போது கால்களை உயர்த்தி வைத்தல், காம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் என்ற சிறப்பு உள்ளாடைகள் அணிவது பயனளிக்கும்.

இந்த அறிகுறிகளுடன் கூடிய பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை அணுகி ரத்த ஓட்டத்திற்கான ஸ்கேன் பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.

பாதிப்புகள் தீவிரமாகும் போது அறுவை சிகிச்சை செய்வது சிறந்தது.