வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28- A,I,J,Q,Y

•நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
•பெண்கள் குடும்ப விஷயத்திலும் தெளிவான முடிவு எடுப்பர்.
•புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உண்டாகும்.
•மாணவர்களுக்கு கல்விக்கான செலவு அதிகரிக்கும்.
•வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.
•கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெறும் போது கவனமுடன் இருக்கவும்.  2,11,20,29- B,K,R

•வியாபாரிகள் வெளிநாட்டு ஒப்பந்தகம் கிடைக்கப் பெறுவர்.
•பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கண்டு மகிழ்வர்.
•பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
•குடும்பத்தில் மனம் மகிழும் படியான சுபவிஷயம் நடக்கும்.
•வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும்.
•வீட்டில் உள்ள முதியோருக்கு உடல்நலம் சீர் பெறும்.


3,12,21,30 -C,G,L,S

•பெண்களுக்கு எதிலும் கால தாமதம் உண்டாகும்.
•கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
•பணவரவு தாமதப்பட்டாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
•மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
•கலைத்துறையினர் வாழ்வில் நவீன மாற்றம் உருவாகும்.
•அரசாங்க வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.


4,13,22,31- D,M,T

•வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை.
•வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.
•பெண்களுக்கு அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும்.
•கொடுத்த வாக்குக்காக திண்டாடும் நிலை உருவாகலாம்.
•யாரிடமும் கற்பனை பகையால் கோபம் கொள்ள வேண்டாம்.
•குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.5,14,23- E,H,N,X

•சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
•அக்கம்பக்கத்தினருடன் அதிக நெருக்கம் வேண்டாம்.
•சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகலாம்.
•வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
•பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடும்.
•நண்பர்களின் பணஉதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.


6,15,24- U,V,W

•புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் உண்டாகும்.
•கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்த வருமானம் வரும்.
•பிள்ளைகள் வழியில் சுபச்செலவு அதிகரிக்கும்.
•உடல்நிலை மேம்படும். மருத்துவ செலவு குறையும்.
•அரசியல் துறையினருக்கு எதிரிகளும் நண்பராக மாறுவர்.
•கொடுத்த வாக்கை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

7,16,25- O,Z

•பெண்கள் உறவினர் மத்தியில் பாராட்டு பெறுவர்.
•அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
•சுபவிஷயத்தில் தடை நீங்கி எதிர்பார்ப்பு நிறைவேறும்.
•தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். .
•சாதுர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
•பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்காது.


8,17,26- F,P

•குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.
•மாணவர்கள் தேர்வு நோக்கில் அதிக நேரம் படிப்பர்.
•கலைத்துறையினருக்கு கவுரவம் உயரும்.
•விரும்பிய பதவி கிடைக்கும், குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும்..
•வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும்.
•கைவிட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்கும்.


9,18,27

•எதிலும் அலட்சிய போக்கை தவிர்ப்பது நல்லது.
•முன்பை விட இந்த வாரம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
•எடுத்த செயல் ஓரளவு வெற்றிகரமாக முடியும்.
•தொழில் ரீதியான பயணம் தள்ளிப்போகும்.
•நட்பு வட்டாரத்தில் செல்வாக்குடன் திகழ்வீர்கள்.
•அதிகம் யோசித்து மனதைக் குழப்பாமல் இருப்பது நல்லது.


மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் வெற்றி
ரிஷபம் செலவு
மிதுனம் தெளிவு
கடகம் பயம்
சிம்மம் தடங்கல்
கன்னி தோல்வி
துலாம் சோதனை
விருச்சிகம் முயற்சி
தனுசு நலம்
மகரம் நஷ்டம்
கும்பம் ஈகை
மீனம் நன்மை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X