வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
நினைத்து செயலுக்கு வராத பல விசயங்கள் வெற்றிகளைக் குவிக்க உள்ளது.
அரசாங்க அலுவலர்கள் பதவி உயர்வு கிடைக்கும்
அரசியல்வாதிகள் திடீர் பதவி மாற்றங்களால் செல்வாக்கு பெறுவர். உணவகங்கள், தொழிற்சாலைகள், வாகன தொழில் புரிவோர் அதிக ஆதாயம் பெறுவர்.
ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றம் நிச்சயம்.
ஏற்பட்ட பல குழப்பங்கள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

எண்: 1, 3, 4, 5, 9
உதாரணம்: 1414 =10-1
நிறம்: ஆரஞ்ச், அரக்கு

2, 11, 20, 29 B, K, R
அன்பு, அடக்கம், பணிவு கொண்ட உங்களுக்கு நற்பலன்களாகவே நடக்கும்.
உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
அரசுப் பதவியினருக்கு அதிகாரிகளின் நட்பு அதிகரிக்கும். இடமாற்றங்களும் உண்டு.
அரசியல்வாதிகள் கூடுதல் செயல்பாடுகளால் பதவி கிடைக்கும்
உணவகங்கள், ஜவுளி, நகை, குளிர்பானம், கலைத்துறை சார்ந்த தொழில்கள் ஏற்றம் தரும்.
ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல நேரம் தான்
உடல்நிலையில் உணவுக் கட்டுப்பாடு மூலம் பயன் பெறுவீர்கள்.
பெண்களால் நன்மை உண்டு.

எண்: 5, 7
திசை: கிழக்கு, மேற்கு
நிறம் : வெள்ளை, மஞ்சள்.

3, 12, 21, 30 C, G, L, S
கட்டுப்பாடு மிகுந்த தங்கள் நடவடிக்கை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.
இலவச ஆலோசனைகளை நிறுத்திவிடுங்கள்.
அரசு பதவியினர் நற்பெயர் பெறுவது நல்லது.
அரசியல்வாதிகள் தலைமையிடம் அடக்கமாக நடந்து கொண்டால் பதவி நீடிக்கும்.
நகைக்கடை, ஜவுளி, ஓட்டல்கள் துறையினர் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும்
உடல்நிலையில் சிறிய உபாதைகள் ஏற்படலாம்.

எண்: 1, 9
திசை : கிழக்கு, தெற்கு
நிறம்: ஆரஞ்ச், சிவப்பு

4, 13, 22, 31 D, M, T
இந்த ஆண்டு அளப்பரிய அளவில் அதிர்ஷ்டம் வரப்போகிறது.
எதிர்பார்த்த உயர்வுகள் அரசாங்க அதிகாரிகள் பெறுவர்.
அடிமட்டத் தொண்டன்கூட, அசாத்திய உயர்வைப் பெறுவார்.
அரசியலில், வாய்பேச்சால் வம்புகளும் வரலாம் உஷார்
வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி களை கட்டும். வருமானம் பெருகும்.
அயல் தேச பயணங்களால் ஆனந்தம் அடைவர்.
இரும்பு, மருந்து, உணவுப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ் துறையினர் ஏற்றங்களைப் பெறுவர்

எண்: 1, 5, 9
திசை: கிழக்கு, வடக்கு, தெற்கு
நிறம் : அரக்கு, பச்சை, சிவப்பு.

5, 14, 23 E, H, N, X
ஆண்டு ஆரம்பமே அமர்க்களம்தான்.
சென்ற ஆண்டில் திட்டம் போட்டு திணறியவைகள் தீர்க்கமான நல்ல முடிவு வரும்
ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், பலசரக்கு, ஜவுளி தொழில் புரிவோர் அதிக லாபம் பெறுவர்
அரசாங்க அலுவலர்களின் பதவி உயர்வு நிச்சயம்.
அரசியல்வாதிகள் தங்கள் திறமையைக் காண்பிக்க சரியான தருணம்.
உயர்வான உடல்நிலை, பெற்றோர்கள் நலம்.
குழந்தைகளும் நல்ல நிலை என எல்லாமே மகிழ்ச்சி தான்.

எண்: 1, 2, 4
திசை: கிழக்கு, வடக்கு
நிறம்: வெள்ளை, மெரூன்.

6, 15, 24 U, V, W
ஆண்டு நல்ல துவக்கமாகவே இருக்கும்.
வெளிநாடு சென்று பணத்தைக் குவிக்கலாம்.
லாட்டரி, ரேஸ் போன்றவைகளால் திடீர் பணம் வரலாம்
பெண்களால் மகிழ்வும், சற்று சிரமமும் வரலாம்.
அரசாங்கத்தில் எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும்.
அரசியல்வாதிகள் தலைமையுடன் சுமூகமாகப் போவதே நல்லது.
திரைப்படத் துறையினர் வெகுவாக லாபம் பெறலாம்.
ஓட்டல்கள், ஆபரணம், ஜவுளி தொழில் புரிவோர் கூடுதல் லாபம் பெறுவர்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும்

எண்: 2, 9
திசை: தெற்கு, மேற்கு
நிறம்: பச்சை, வெள்ளை, சிவப்பு

7, 16, 25 O, Z
இவ்வாண்டு, நினைத்தவை நடக்கும்
அடிக்கடி ஆனமீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
உணவகங்கள், எலக்ட்ரானிக்ஸ், கடல் சார்ந்த துறையினர் நிறைவான வாழ்வைப் பெறலாம்
அரசுத் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்அரசியல்துறையினரும் கடும் முயற்சியால் புது பதவிகள் பெறலாம்
எண்: 2, 5, 6
திசை: வடக்கு, மேற்கு
நிறம்: வெள்ளை, மற்றும் வெளிறிய நிறங்கள்8, 17, 26 F, P
திருமண காரியங்கள் கைகூடிவரும்
பெண் குழந்தைகளால் பெருமையும் புகழும் வந்து சேரும்.
இரும்பு, எலக்ட்ரிகல், கெமிகல், கிரானைட் துறையினர் எதிர்பாராத திருப்பங்கள் பெறலாம்.
அரசாங்க ஊழியர்கள் பெருமை சேர்ப்பர்.
அரசியல்வாதிகள் தலைமைக்கு மிகவும் நேசமாக நடந்து கொள்வர்.
உடல் நலம் பெறும். பல நாள் வியாதிகள் பறந்தோடும்.
வெளிநாடுகள் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.
தடுமாற்றம் அடைந்து பல விசயங்கள் நல்ல தீர்வாக அமைந்திடும்.

எண்: 2, 5, 6
திசை : வடக்கு
நிறம்: பச்சை, வெள்ளை

9, 18, 27
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
உணவகங்கள், இரும்பு, எலக்ட்ரிகல் துறையினர் நல்வாய்ப்புகளை பெறலாம்
அடக்குமுறைகளால் எதையும் பெற இயலாது
உஷ்ணம் அதிகரித்தாலும் உணவுக் கட்டுப்பாட்டினால் உயர்வு பெறலாம்.
பக்திமார்க்கம் பரவசமூட்டும்.
பெண்களால் நன்மை உண்டு.
அரசாங்க ஆதரவு அதிகரிக்கும்.

எண்: 1, 4, 9.
திசை: கிழக்கு, தெற்கு
நிறம்: சிவப்பு, அரக்கு.

மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்(03.12.2020)

மேஷம் வெற்றி
ரிஷபம் நிம்மதி
மிதுனம் புகழ்
கடகம் பயம்
சிம்மம் அமைதி
கன்னி சினம்
துலாம் மகிழ்ச்சி
விருச்சிகம் கவனம்
தனுசு ஆக்கம்
மகரம் எதிர்ப்பு
கும்பம் ஜெயம்
மீனம் பக்தி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X