மகரம்: சுக்கிரன், செவ்வாய் நன்மைகளை வழங்குவார்கள். நள்ளாற்று நாயகனை வழிபடுவதின் வழியே சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 2, 3, 4: ஞாயிறு மாலை வரை நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள் அதன்பின் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. மனதில் ஏதேனும் குழப்பங்கள் உண்டாகும். உறவுகள் வழியே நெருக்கடிகள் தோன்றும்.
திருவோணம்: துணிச்சலாக செயல்பட்டாலும் அவற்றில் தடைகளை சந்திப்பீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். தேவையற்ற சிந்தனைகளால் நல்லவர்களையும் இழப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் இழுபறி நிலையே இருக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2: வாரத்தின் முற்பகுதியில் உங்கள் முயற்சிகளில் லாபத்தைக் காண்பீர்கள். அதன்பின் பயணம், அலைச்சல் என்று தோன்றும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, ஜாமின் போடுவதோ வேண்டாம். உறவுகள் உங்களுக்கு எதிர்ப்பாகலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை.