கன்னி: புதன், குரு நன்மையை வழங்குவார்கள். வளம் தரும் வேங்கடவனை வழிபடுங்கள்.
உத்திரம் 2, 3, 4: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும் குரு பார்வையால் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சனிக்கிழமையில் சில தடைகள் தோன்றும்.
அஸ்தம்: குரு பலத்தால் உங்கள் நிலை உயரும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சிகள் ஆதாயமாகும். அரசு ஊழியர்களின் விருப்பம் நிறைவேறும். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் இறங்குவர். சனி, ஞாயிறன்று செயல்களில் கவனம் தேவை.
சித்திரை 1, 2: இரண்டாமிட கேதுவால் வார்த்தைகளால் சங்கடம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசு வழி செயல்கள் ஆதாயமாகும். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். ஞாயிறன்று சில நெருக்கடி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 28.1.2023 நள்ளிரவு 12:25 மணி - 30.1.2023 காலை 7:00 மணி