வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1,10,19,28- A,I,J,Q,Y

• பொறுப்பு காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.
• நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
• பொதுநலனுக்காக பாடுபட்டு நற்பெயர் காண்பீர்கள்.
• கலைஞர்களின் வெற்றி வாய்ப்பை பெற்று மகிழ்வர்.
• திருமணம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.
• உடன்பிறந்தவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.


2,11,20,29- B,K,R

• குடும்பத்தில் அமைதி சீரற்ற நிலையில் இருக்கும்.
• தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை.
• ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
• பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு உயரும்.
• பெண்களுக்கு பயம் அகன்று மனதில் துணிவு கூடும்.
• பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.

3,12,21,30 -C,G,L,S

• பணவரவு தாமதப்படும். செலவில் சிக்கனம் தேவை.
• குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு தொடங்கும்.
• வீண்வம்பு காரணமாக மற்றவர் ஏச்சுக்கு ஆளாகாதீர்கள்.
• பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புண்டு.
• உடல் நலனில் அக்கறை தேவை. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
• வழிபாட்டின் மூலம் நிம்மதியும், அமைதியும் காண்பீர்கள்.


4,13,22,31- D,M,T
• புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
• தொழில், வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம்.
• பணியாளர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
• வெளியூர், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.
• குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
• நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.


5,14,23- E,H,N,X

• குறிக்கோளை நோக்கி வேகமாக முன்னேறுவீர்கள்.
• சுபவிஷயத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
• கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும்.
• உறவினர் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும்.
• பிள்ளைகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.
• வாழ்க்கை துணையின் உடல்நலனில் அக்கறை தேவை.

6,15,24- U,V,W

• சமூகத்தில் அந்தஸ்து மிக்க மனிதராக திகழ்வீர்கள்.
• நீண்ட கால திட்டம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள்.
• பணவரவு அதிகரிக்கும். சேமிக்க வாய்ப்புண்டு.
• தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் லாபம் அடைவீர்கள்.
• கலைத்துறையினருக்கு மதிப்பு, மரியாதை கூடும்.
• அரசியல்வாதிகளின் முயற்சியில் முன்னேற்றம் காண்பர்.


7,16,25- O,Z

• எதிலும் நிதானமும் அக்கறையும் தேவை.
• அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
• எதிர்பாராத சங்கடங்கள், வழக்குகளை சந்திக்க நேரலாம்.
• சகோதர வழியில் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.
• வீடு மாற விரும்புவோருக்கு நல்ல வசதியான இடம் அமையும்.
• அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்ப்பது அவசியம்.


8,17,26- F,P

• எதையாவது நினைத்து குழப்பம் அடைவதை தவிருங்கள்.
• பெண்களுக்கு உறவினர் மூலம் பிரச்னை ஏற்படலாம்.
• நிதி விவகாரங்களில் சீரான நிலை இருக்கும்.
• குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு சுபசெய்தி உண்டு.
• தாயிடம் இருந்து உதவிகள் கிடைக்கும்.
* காலியாக இருக்கும் உங்கள் வீட்டிற்குப் புதிய வாடகைதாரர் கிடைப்பர்.
• மகன்/ மகள் கல்வி வகையில் திடீர் செலவு வரும்.


9,18,27

• ஆன்மிக ஈடுபாட்டால் அடிக்கடி கோயிலுக்கு செல்வீர்கள்.
• வீண் விவாதங்களில் ஈடுபடாமல் விலகுவது நல்லது.
• வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
• அலுவலகத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவீ்ர்கள்.
• மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் குணமாகி வீடு திரும்புவர்.
• புதிதாக செல்போன், லேப்டாப் வாங்க வாய்ப்புண்டு.


மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்(30.11.2020)

மேஷம் தனம்
ரிஷபம் பரிசு
மிதுனம் நலம்
கடகம் நட்பு
சிம்மம் வெற்றி
கன்னி லாபம்
துலாம் சுகம்
விருச்சிகம் அமைதி
தனுசு விவேகம்
மகரம் பாசம்
கும்பம் ஆதரவு
மீனம் நற்செயல்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X