Advertisement
sasikala_jail
மக்கள் நிம்மதிக்கு வயது 365 நாள்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பின்னணியில் இருந்து ஆட்டுவித்த சசிகலா, சிறைக்கு சென்று, ஓராண்டு ஆகிறது. மக்கள் நிம்மதிக்கு பிப்ரவரி 15ம் தேதி உடன் 365 நாட்கள் ஆகிறது. அதாவது, ஊழல், விதிமுறை மீறல், லஞ்சம், முறைகேடு மூலம் நாடெங்கும் சசி குடும்பம், ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது, கடலில் ஒரு துளி தான் என்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
எந்த முதலீடும் இல்லாமல், தான் உழைக்காமல் மற்றவர் உழைப்பை உறிஞ்சி, மாநில முதல்வராக இருந்த ஒருவரை தவறாக வழி நடத்தி, ஊழல் சாம்ராஜ்ஜியம் நடத்தியவர் சசி.
சசி விஷயத்தில் நீதி நிலைநாட்டப்பட்டு, ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டதாக, எடுத்துக்கொண்டாலும், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

சசி விவகாரத்தில், இதுவரை நடந்தது; இன்னும் நடக்கப் போவது பற்றிய உங்கள் கருத்துகளை இங்கு புகைப்படத்துடன் எழுதுங்கள் வாசகர்களே. அவை இப்பக்கத்தில் வெளியிடப்படும்.

வாசகர்களின் கருத்துக்கள்(156)

156 . N Renganathan Muscat

it is good that Sasi was sentenced.There are many questions remain unanswered. why the judgement was not delivered when when Jaya was alive? but delivered immediately upon demise of Jaya. Till date few selective politicians were convicted ie; Lalu,Sasi why not other corrupt politicians. Independence of Judicatory should be preserved to preserve our democracy/our independence.Did the govt take sincere effort to extradite Malaya. Stop Nirav Modi from fleeing. I am worried lot about our country.

16-பிப்-2018 03:03:59

155 . Manian Chennai

80 -90 % லஞ்சம் கொடுப்போர், ஓடடை விற்போருக்கு ராமரா வந்து ஆட்சி தர முடியும்? ஜட்டி-மதம்-இட ஒதுக்கீடு என்று துடித்தவர்களுக்கு அவர்கள் சொந்தங்கள்தானே தலைவராக முடியும். பொதுவாக சுயநலம் பிடித்த திராவிடர்களுக்கு அகஸ்திய முனிவரா தலைவராக முடியும்?. கருது எழுதுபவர்கள் எத்துணை சத விகிதம் யோக்கியர்கள் என்று நெஞ்சில் காய் வைத்து சத்தியம் செய்த பின் நிலை கண்ணீர் வடிக்கலாம். கடந்த கால தவறுகளின் பலனை எல்லோருமே அனுபவித்துத்தான் ஆகவேண்டும். சசிகலை அதே குற்றவாளி மக்களில் ஒருவர்., அவ்வளவுதான்!

16-பிப்-2018 02:41:53

154 . Samir Trichy

பின்னே எதுக்குடா தினகரனுக்கு வோட்டு போட்டிங்க ? முட்டாளுன்னு மீண்டும் மீண்டும் நிரூபிக்கவா ??

15-பிப்-2018 22:28:29

153 . Adhvikaa Adhvikaa chennai

சசிகலாவை மீண்டும் போயஸ் கார்டனுக்குள் சேர்த்தது அம்மா செய்த தவறு. . தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற ஆண்டு முதல் , வெட்டி விளம்பரம், ஆடம்பர மோகம், குடும்ப அரசியல் , பிற மொழி வெறுப்பு, இந்து மத வெறுப்பு ஆகியவை தலை தூக்கின. காவிரி தண்ணீர் விஷயத்தில் கர்நாடகாவுக்கு கூடுதல் அணை கட்டிக்கொள்ள சட்டசபையிலேயே தீர்மானம் போட்டு அனுமதி கொடுத்தது திமுக தான். திமுகவே அனைத்து தீமைகளுக்கும் வழிகாட்டி. சசி குடும்பத்தை மட்டும் தூற்றி புண்ணியம் இல்லை. திமுக, சசி குடும்பம் இரண்டுமே ஊழல் வாதிகள் தான்.

15-பிப்-2018 19:53:43

152 . ram kumar Chennai

' தியாக செம்மல் சின்னம்மா வுக்கு கண்ணகி சிலை பக்கத்தில் எங்கள் சின்னம்மா சிலை வைக்கப்படும் ' ' சின்னம்மா வின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் ' - அப்படினு இன்னும் 5 வருஷம் கழுச்சு இதே கட்சி சொல்லும் , நம்மளும் நியூஸ் பாத்துட்டு இப்படி கமெண்ட் போட்டுக்கிட்டு போயிட்டே இருப்போம் . - ஏமாற்றுபவரை விட ஏமாளிகளுக்கு தான் தண்டனை குடுக்கணும் ( என்னையும் சேர்த்து தான் சொல்றேன் ).

15-பிப்-2018 19:38:00

151 . S.Palanivelu Chennai

அரசியல் -மக்களுக்கு தொண்டு செய்ய இருந்த நிலை மாறி , கொள்ளையடிக்கவும் , கொலைசெய்யவும் ,தொழிலாய் மாறிப்போனது , இதில் சசிகலா எந்த ஒரு அரசியல் பின்னணி இல்லாமல் ,(பணிப்பெண் போர்வையில் ) அடித்த கொள்ளை உலகத்துக்கு தெரியும் . அடித்த கொள்ளை அனைத்தும் அரசு பறிமுதல் செய்யவேண்டும் . இந்த லட்சணத்தில் சசிக்கு முதல்வர் பதவி ஆசை .தரம்கெட்டமனிதர்கள் .

15-பிப்-2018 18:35:47

150 . S.Baliah Seer Chennai

நிம்மதிக்கு வயது 365 நாள் என்பது ஏற்புடையது அல்ல.இலவசங்கள்,மற்றும் குடி மூலம் தமிழ் நாட்டின் மக்களில் பெரும்பாலானவர் நிம்மதி பறி போய்க்கொண்டிருக்கிறது. பதவி வெறியே பண வெறியை விட படு மோசமானது.'ஜெ' -வின் பதவி வெறியே எல்லாவற்றிற்கும் மூல காரணம்.அவர் நல்லவராய் இருந்திருந்தால் என்றோ அண்ணா தி.மு.க-விலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். தன் பதவி சுகத்திற்காக தன்னை சுற்றி இருந்தவர்களை கொள்ளை அடிக்க விட்டதால்தான் இன்று தமிழக மக்கள் நிம்மதி இல்லாமல் ஏண்டா தமிழ் நாட்டில் பிறந்தோம் என்று தவிக்கிறார்கள்.

15-பிப்-2018 17:56:37

149 . Anand Rao.v Chennai

இந்த ஊழல் முதலை இன்னும் மூன்றாண்ண்டுகளில் திரும்பி வந்து விடுமே .பிடிபட்ட ஊழல் சொத்துக்கள் நமது நாட்டில் அரசுக்கு போவதில்லை.மீண்டும் பிடிபட்ட இடத்துக்கே சென்று வீசும். அப்படியே அரசுக்கு போனாலும், மிச்ச முல்லா ஊழல் பணம் பெரும்பாண்மை தானே. இன்னுமா இந்த கொலைகார அரக்கி தமிழ் நாட்டிற்கு தேவை? ஆண்டவன் இருப்பது உண்மையானால் இவள் வாழ்வு சிறையிலேயே முடிய வேண்டும்.

15-பிப்-2018 17:55:20

148 . Ramanathan Balachandran Chennai

மோர் கேஸேஸ் should be filed அகைன்ஸ்ட் சசிகலா டு கீப் ஹேர் இந்த சிறையில் for லைப் time Balachandran.

15-பிப்-2018 17:49:32

147 . தலைவா chennai

நொங்கு திண்ணவன் செத்து போயிட்டதால அதை நோண்டி திண்ணவன் மாட்டிகிவிட்டான் அப்படின்னு சொல்லுவாங்க கிராமத்தில அதான் ஊழல் செய்றவங்களும் மேல் சாதில பிறக்கணும் அப்பத்தான் நிதி மந்திரில இருந்து பிரதமர் வரைக்கும் வந்து உதவுவாங்க அது தெரியாம எல்லாரும் காசு சேர்க்க ஆசைப்பட்டா கையில காப்பு மாட்டாதான் செய்வாங்க...அதென்ன தலைப்பு மக்கள் நிம்மதி..வேணும்னா குரு குலம் நிம்மதின்னு போட்டுகொங்கா.ஆனா ஒன்னு நைனா இந்த அம்மா அதிகாரத்துக்கு வந்துகிச்சுன்னா அப்புறம் குடுமி என்னாகும்.

15-பிப்-2018 17:04:17

146 . sachin madurai

மக்கள் எங்க சார் நிம்மதியா இருகாங்க , அதான் பி எஸ் , பி எஸ் னு இரண்டு பெரு ஆட்சி பண்ண தெரியாமல் மக்களை கஷ்டப்படுத்தி கொண்டு இருக்காங்க இதுல எங்க நிம்மதி இருக்கு சொல்லுங்க ....மக்கள் திட்டம் என்ன செய்தார்கள் சொல்ல முடியுமா இந்த ஒரு வருடத்தில் ....எல்லாத்தியும் விலை ஏத்தி சந்தோச படுறாங்க.

15-பிப்-2018 16:47:56

145 . vadivelmaran Pune

Entire mafia group should be put behind bar GOD will not leave them this Manargudi family, than only TN political scinoris will change other wise TTV will talk patriotic family

15-பிப்-2018 16:33:43

144 . Sitaramen Varadarajan chennai

சொத்துக்கள் ஏன் பறிமுதல் செய்யப்பட வில்லை. இதில் யாரையும் குறை சொல்ல வேண்டாம். 1967 ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை பிடித்து இருந்த பேய்க்கும்பலை கொள்ளைக்கும்பலை விரட்ட எந்த கட்சிக்கும் யோக்கியதை இல்லை. அதனால் இந்த காட்டேரிக்கும்பலை வைத்தே அவர்கள் மீண்டும் பதவிக்கு வரவிடாமல் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. தப்பி தவறி கூட தேச - தமிழக துரோகி சசி கும்பலை முற்றிலும் ஒழிக்க பாட்டு படும் வேளையில். மீண்டும் கட்டுமரம் என்ற விஷ வித்துக்கும்பல் பதவி ஏறி விடாமல் இருக்க ஆவண செய்தெ ஆகவேண்டும்.

15-பிப்-2018 16:29:44

143 . vnatarajan chennai

ஒரு லச்சம் கோடி சொத்தையும் அரசாங்கம் கைப்பற்றினாலொழிய சசி வெளியே வந்தாலும் திருந்தமாட்டார். 2021 தேர்தலுக்குப்பிறகு தினகரன் அவருடைய சில MLA க்களுடன் சசிக்கு ஆதரவாக நடந்துகொள்வார். அவர் மேலும் சொத்துக்களை சேர்க்கலாம்

15-பிப்-2018 16:25:54

142 . Murugan Boissy- saint- leger

இதுவரை நடந்தது குறைவுதான் இன்னும் மேலும் அவரிடமும் , அவரை சார்ந்தவரிடமும் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து நல்லதொரு நீர்த்தேக்க அணையை தமிழ் நாட்டில் கட்ட பயன் படுத்தினால் ,தன்னிறைவு அடையும்.இத மாதரி சொத்துக்களை குவித்த பிறகு தண்டனை அளிக்குமுன் ஆரம்பத்திலே கண்டு தண்டனை வழங்கினால் ஊழல் வாதிகளுக்கு .....சாவு மணி அடித்த பயம் ஏற்படும் ...இதை விட மக்கள் ,இந்த மாதரி துரோகிகளை பணத்துக்காக தேர்ந்து எடுப்பதை நிறுத்தாவிட்டால் ,..............(தினகரனை தேர்ந்து எடுத்தது ..........................கேவலம் )

15-பிப்-2018 16:16:03

141 . Tamilnesan Muscat

இந்தியாவில் உள்ள கேவலமான தண்டனை சட்டங்களால் சாகும்வரை தூக்கில் ஏற்றப்பட வேண்டிய சசிகலா, கருணாநிதி போன்றவர்கள் சிறு தண்டனைகள் பெறுவது தேசத்திற்கே அவமானம்! ஒரு ரூபாய் திருடியவனை தூக்கில் போடும் கேடு கெட்ட சட்டங்கள் ஒரு லக்ஷம் கோடிகள் திருடிய அரசியல்வியாதிகளை தினசரி செய்தி தாள்களில் மட்டும் போடுகின்றன. இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.

15-பிப்-2018 14:53:48

140 . Sornam Alagarsamy Chennai

we feel a great relief. but we want to see the govt of India which has promised to weed out corruption and benami properties must take action on this entire family of Sasikala and her group from Mannarkudi. such people should be jail in endless years.The people of Tamilnadu are in big trouble today facing a lot of problems due to such type of looting. I strongly condemn the former cm of Tamilnadu for having this sort of corrupt way of life and bad friendship. JJ has forgotten DRMGR ..so this .

15-பிப்-2018 14:50:23

139 . stalin chennai

இப்பொ மட்டும் என்ன மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்ன அதற்கும் மேலாக தன ஊழல் கொல்லி மற்றும் அராஜகம் எல்லாம் நடக்கிறது

15-பிப்-2018 14:37:42

138 . Thiyagu Ganesh Pudukkottai

நிம்மதி

15-பிப்-2018 14:36:11

137 . Anand K chennai

சசிகலா வை தவிர தமிழகத்தில் யாருமே தவறு செய்யலையா சசிகலா வை விட தமிழகத்தில் பல லட்சம் பேர் ஊழல் செய்யும் அரசியல்வாதி மற்றும் அரசு ஊழியர் உள்ளனர்

15-பிப்-2018 13:58:17

மேலும் கருத்துக்கள்

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X