காரைக்குடி கண்டெடுத்த இளம் தொழிலதிபர்.

பதிவு செய்த நாள் : பிப் 06, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று பல்வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி வைத்திருந்த சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நம்ம காரைக்குடி இளைஞர் ஒருவர் அமைத்திருந்த அரங்கு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மரத்தாலான கண் கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் அரங்குதான் அது.nsimg2207623nsimgசிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சார்ந்தவர் என்ஜீனியர் ஜெயக்குமார். இவருக்கு சிறு வயது முதலே செட்டிநாட்டு மரவேலைப்பாடுகளில் ஈடுபாடு உண்டு. இதன் காரணமாக பெங்களூரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பார்த்து வந்த ஐடி வேலையில் வேலையை விட்டுவிட்டு மரத்தின் துணை கொண்டு மரக் கண் கண்ணாடிகள் தயாரித்து விற்க ஆரம்பித்தார்.


nsmimg670391nsmimg

இரண்டு வருடம்தான் ஆகிறது அதற்குள் ‛டெடிவுட்' என்ற பிராண்டில் இவர் தயாரித்து விற்கும் மரக்கண் கண்ணாடிகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது.செட்டிநாட்டு வீடுகளில் உபயோகித்த பழைய கதவு ஜன்னல் போன்ற மரங்களை பயன்படுத்தி கண்ணாடிகளுக்கான பிரேம்கள் தயாரிக்கிறார். இதனால் இவ்வளவு நாளும் நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் பிளாஸ்டிக் பிரேம்களுக்கு விடை கொடுக்கிறோம் ஆக முதலில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு வழிவகுக்கிறோம்.


அடு்த்ததாக இந்த மரக்கண் கண்ணாடிகளுக்கான பிரேம்கள் மிகவும் லேசானது, கண்ணில் அணிந்திருப்பதே தெரியாது, மூக்கில் வடு ஏற்படுத்தாது, பராமரிக்க எளிதானது, கண்ணாடியில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும்.

எழுநூறுக்கும் மேற்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளார், காரைக்குடியில் வீட்டிலேயே தொழில்கூடம் அமைத்து பலருக்கு வேலை கொடுத்துள்ளார், விலையும் நியாயமானதுதான்.


ஆன்லைனில் மாடலை தேர்வு செய்துவிட்டு உங்கள் கண் பவரை சொல்லி ஆர்டர் கொடுத்துவிட்டால் போதும் வீட்டிற்கு கண்ணாடி தேடிவந்துவிடும். இந்தியாவில் முதல் முறையாக மரத்தால் செய்யப்பட்ட இந்த கண்ணாடி மேக் இன் இந்தியாவாக இருப்பதில் இவருக்கு பெருமை. இந்த கண்ணாடிகள் உள்நாட்டில் மட்டுமின்றி இதன் தரம் காரணமாக வெளிநாடுகளிலும் நல்லபடியாக விற்றுவருகிறது.


இப்போது இதில் கூலர்ஸ் எனப்படும் கூலிங்கிளாஸ்களும் தயாரித்து வருகிறார்.என்னுடைய தயாரிப்புகளுக்கு தற்போது நிறைய தேவை உள்ளது.காரைக்குடியில் பெரிய அளவில் தொழிற்சாலை துவங்கி இன்னும் நிறைய பேருக்கு வேலை கொடுக்கும் பெரிய நிறுவனமாக நிச்சயமாக மாற்றுவேன், எனக்கு உடனடியாக தேவை முதலீட்டாளர்தான் என்று சொல்லும் ஜெயக்குமாரை தொடர்பு கொள்வதற்கான எண்:9629220575 .இவரது www.tetewood.com வலைத்தளத்திற்கு சென்றால் இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.


-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in


இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
12-பிப்-201911:40:15 IST Report Abuse
I love Bharatham வாழ்த்துக்குள்
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
11-பிப்-201911:33:17 IST Report Abuse
Rahim Gani எங்கள் ஊர் தொழில் அதிபர் ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.......
Rate this:
Share this comment
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
11-பிப்-201905:52:06 IST Report Abuse
Subramanian Sundararaman பிளாஸ்டிக்கை ஒழிக்கிறேன் என்று மூக்கு கண்ணாடி தயாரிக்க மரம் வெட்டப்படுவது அதிகமாக ஆனால் அது நல்லது அல்ல. சீனாவில் அவர்கள் உணவை இரண்டு மர குச்சிகள் மூலம் சாப்பிட்டு வந்தனர். இது நிறைய மரம் வெட்டுதலுக்கு காரணமானதால் அந்த மரக்குச்சிகளுக்கு பதிலாக மீண்டும் உபாயகப் படுத்தக்கூடிய பொருளால் செய்யப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X