கும்பமேளாவில் செந்தில்குமார்.

பதிவு செய்த நாள் : பிப் 09, 2019
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுச்சேரியை சேர்ந்தவர் தாய்லாந்தில் இருப்பவர்வாழ்க்கைக்கு ஐடி தொழிலையும்,மனசுக்கு புகைப்படத்துறையையும் தேர்ந்துஎடுத்தவர்.

nsimg2209802nsimg

எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக படம் எடுப்பதில் வல்லவர், ஒரு படம் எடுக்க நிறையவே மெனக்கெடுபவர்.தான் எடுக்கும் படத்தில் நுாற்றுக்கு நுாறு சதவீதம் ரிசல்ட் தரவிரும்புவர்.

nsmimg671090nsmimg

இவரது படங்களை ரசிப்பதற்கு என்றே முகநுாலில் நாலாயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர் அந்த ரசிகர்களில் வடமாநிலத்தில் உள்ள கங்கா சபா உறுப்பினர்களான சாமியார்களும் உண்டு.

nsmimg671092nsmimg

இவர்கள் தற்போது நடந்துவரும் பிராயக்ராஜ் கும்பமேளாவில் பெரியளவில் ஆன்மீகப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.கும்பமேளாவில் கோடி கோடியாய் மக்கள் சங்கமிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவினை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள தலைசிறந்த பதினைந்து புகைப்படக்கலைஞர்களை வரவழைத்தனர்.

nsmimg671093nsmimg

வந்தவர்களுக்கு உணவு உறைவிடம் மட்டும் உரிய அனுமதி அட்டை கொடுத்த உங்கள் விருப்பப்படி படம் எடுத்து எங்களுக்கு ஒரு ‛செட்' கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

nsmimg671094nsmimg

அப்படி தேர்வு செய்யப்பட்டு படம் எடுக்க அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் நமது செந்தில்குமார் .தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவரும் இவர் ஒருவர்தான்.

நான்கு நாட்கள் தங்கியிருந்து நிறைய படங்களை எடுத்துள்ளார்.நாள்தோறும் முப்பது கிலோமீட்டர் துாரத்திற்கு நடந்துள்ளார்.இரவில் கடுமையான குளிரையும் பகலில் அதற்கு இணையான வெப்பத்தையும் தாங்கிக்கொண்டுள்ளார்,நிறைவாக கங்கா சபையினர் மனம் திறந்து வாழ்த்தும்படியான படங்களை எடுத்துதந்துள்ளார்.அந்த படங்களில் சிலவற்றை இங்கே காணலாம் அவரை பாராட்ட எண்ணினால் அதற்கான எண்:9597330096.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.inஇதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X