அழகிய ஆஸ்திரேலியா

பதிவு செய்த நாள் : ஏப் 15, 2019
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

nsmimg684370nsmimgஇசைக்கவி ரமணனின் ஆஸ்திரேலியா அனுபவங்கள்...இசைக்கவி ரமணன் தனது ஆஸ்திரேலியா பயண அனுபவங்களை, அங்கு அவர் எடுத்த தனது அற்புதமான படங்களைக் கொண்டு பேச இருக்கிறார். தமிழையும், புகைப்படக்கலையையும் ஒரு சேர ரசிக்க கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு இது தவறவிடாதீர்கள்.கலைமாமணி இசைக்கவி ரமணன்நெல்லையில் பிறந்து தேசம் முழுவதும் பறந்து தற்போது சென்னையில் வசிக்கும் தமிழ்க் கவிஞர். சென்னை மக்களின் சாயங்கால சந்தோஷம்.பல்வேறு தலைப்புகளில் சென்னையில் உள்ள அனைத்து சபாக்களிலும் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் வித்தியாசமான தலைப்புகளில் இவரது சுவராசியமான உரையிருக்கும்.ஒரு முறை இவரது பேச்சை கேட்பவர்கள் பின் ஆயுளுக்கும் இவரது தமிழுக்கும் அன்பிர்க்கும் பண்பிர்க்கும் அடிமையாவது உறுதி.தனது கவிதைகளை இசையுடன் பாடும் பாடகர். இலக்கியம், ஆன்மிகம் இரண்டும் கலந்து வாழ்வியல் பேசும் பேச்சாளர்.15 கவிதை, கட்டுரை நூல்களின் ஆசிரியர். மொழிபெயர்ப்பாளர். இவரது குரலில் ஏாராளமான கவிதைகள், பாடல்கள் குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டு உள்ளது.33 முறை இமய மலைக்கு பயணம் சென்றவர், அங்கே உள்ள ஜாகேஸ்வரில் உறக்கம் துறந்து உணவு மறந்து பல நாட்கள் ஞானத்தை தேடி தவ வாழ்க்கை மேற்கொண்டவர்.சலிக்காத ஆன்மிகப் பயணி. தொடர்ந்து வெளி நாடுகளுக்குச் சென்று தமிழ் முழக்கமிடும் சொற்பொழிவாளர்.தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்தவர். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல "பாரதி யார்?" மேடை நாடகத்திற்கு வசனமெழுதி, பாரதியாக வேடமேற்றுப் பாரெங்கும் பவனி வருபவர். புகைப்படக் கலைஞர். தமிழ்க் கவி என்னும் அடையாளம் மட்டும் போதும் எனும் மன நிறைவுடன் வாழ்பவர்.இவர் சமீபத்தில் 56 நாட்கள் சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா,கனடா,அமெரிக்கா உள்ளீட்ட நாடுகளில் உள்ள தமிழ் அன்பர்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அருமைத்தமிழை பரப்பிவிட்டு இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் சென்னை திரும்பினார்.nsimg2256527nsimgஇவருக்குள் உள்ள புகைப்படக் கலைஞருக்கு இந்த முறை ஆஸ்திரேலியாவில் நல்ல புகைப்பட வேட்டை கிடைத்தது.படங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.nsmimg684371nsmimgஆஸ்திரேலியா என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடிய கங்காருவை அதன் வேகத்திற்கு விரட்டிச் சென்று இவர் எடுத்த படங்களும் அது தன் குட்டியுடன் உலாவரும் படங்களும் பார்க்க பார்க்க பரவசம் தருபவை.அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் லேண்ட் மார்க்கான ஒபேரா கட்டிடம் உள்ளீட்ட பல இடங்களின் படங்கள் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை தருகின்றன.nsmimg684372nsmimgவழக்கமாக ஆன்மீக, இலக்கிய, இசைத்தமிழ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் இசைக்கவி ரமணன் நீண்ட நாட்களுக்கு பிறகு பவர்பாயிண்ட் பிரசன்டேஷனுடன் தான் எடுத்த படங்களைப் போட்டுக்காட்டி தனது ஆஸ்திரேலியா பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.nsmimg684373nsmimgசுவராசியமான தமிழையும் கூடவே அற்புதமான படங்களையும் பார்க்க போவதால் இது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை நிச்சயம்தரும்.nsmimg684374nsmimgஇது இலவச நிகழ்ச்சி என்பதால் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம்.நிகழ்ச்சி நாளை (16/ 04/ 2019- செவ்வாய் கிழமை) மாலை சென்னை மைலாப்பூர் வடக்கு மாடவீதியில் உள்ள லட்சுமி கிரி அரங்கில் மாலை 6:30 மணியளவில் நடைபெற உள்ளது.nsmimg684375nsmimg-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X