ஜாதிகளை வைத்து அரசியல் நாடகம் போடாதீர்!

பதிவு செய்த நாள் : பிப் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜாதிகளை வைத்து அரசியல் நாடகம் போடாதீர்!

எஸ்.மதன், நுாலகர், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'நாட்டில் ஜாதியே இல்லை. மனித ஜாதியில், இரண்டே ஜாதி தான் உள்ளன. ஒன்று, ஆண் ஜாதி; மற்றொன்று பெண் ஜாதி' எனக்கூறி, ஜாதி கலவரத்தை துாண்டி விடுவோர், திராவிட கட்சிகளின் தலைவர்கள் தான்!'பாம்புக்கு பல்லில் தான் விஷம். பார்ப்பானுக்கு உடம்பெல்லாம் விஷம்' என்பது, தி.க., - தி.மு.க., போன்ற கட்சி தலைவர்களால் அடிக்கடி பேசப்படும், வாசகம். 'ஆட்டுக்கும், மாட்டுக்கும் இரண்டு கொம்பு; ஆனால், அய்யங்காருக்கு மூன்று கொம்பு' என, இழிவாகவும் பேசுபவர்கள். பிராமணர்களை இழிவாக பேசி, தமிழகத்தில் அரசியல் நடத்தியவர்கள், ஈ.வெ.ரா., - அண்ணாதுரை போன்றோர் தான். அவர்களது வழியில் வந்த, கருணாநிதி, தான் முதல்வராக இருந்த போது, சமத்துவபுரம் திட்டத்தை ஏற்படுத்தினார்.'அனைத்து ஜாதியினரும், ஒன்றாக ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக, இந்த திட்டத்தை செயல்படுத்துகிறேன்' என்றெல்லாம் கூறினார். மக்கள் வரிப் பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து, சமத்துவபுர குடியிருப்புகள் பல ஊர்களில் கட்டப்பட்டுள்ளன. ஆனால், எவ்வித பராமரிப்பும் இல்லாததால், பல இடங்களில், சமத்துவபுர கட்டடங்களில், ஆடு, மாடுகள் தான் மேய்கின்றன. அந்த வீடுகளில், மக்கள் யாரும் குடியிருக்கவில்லை.ஒரு சில ஜாதிகளுக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவை எனக் கூறி, அனைத்து வகையிலும் இலவசங்களையும், சலுகைகளையும், அரசு அள்ளி தருகிறது. அந்த ஜாதியில் தான் ஏழைகள் இருக்கின்றனரா... மற்ற ஜாதிகளில் ஏழைகளே கிடையாதா?நாட்டில் அனைத்து ஜாதியையும் சமமாக, அரசு பார்க்க வேண்டும். அதை கருத்திற் கொண்டு தான், பொருளாதார ரீதியில், பின்தங்கியுள்ள முற்போக்கு வகுப்பை சேர்ந்த மக்களுக்கும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு அறிவித்துள்ளது; அதை, தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் எதிர்க்கின்றன. அனைத்து ஜாதியிலும், பணக்காரர்களும், ஏழைகளும் உள்ளனர். எனவே, பொருளாதார ரீதியில், பின்தங்கியோர் என, பட்டியலிட்டு, அவர்கள், எந்த ஜாதியாக இருந்தாலும், இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதை, முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ள, மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்!***மன தைரியத்தை போலீசாருக்கு வரவழைக்கணும்!எஸ்.லிங்கேஸ்வரன், எஸ்.ஐ., (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: வேலையில்லா திண்டாட்டத்தாலும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததாலும், உயர் படிப்பு படித்தோரும், போலீஸ், 'கான்ஸ்டபிள்' வேலைக்கு வந்து விடுகின்றனர். படிக்கும் காலத்தில், சுதந்திரமாக இருந்து விட்டு, பல கனவுகளுடன், காவல்துறை பணிக்கு வருவோர், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஒத்துப் போவதில்லை. சுக வாழ்க்கையை அனுபவித்து வந்தோருக்கு, காவல் பணியின் போது, சத்திரம், தெரு ஓரம் போன்ற, கிடைத்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்க, மனம் மறுக்கிறது. காவல் துறைக்கு உரிய கண்டிப்புகள், கீழ்படிதல் போன்றவற்றை அடக்குமுறையாகவே எண்ணுகின்றனர்.முன்பெல்லாம், யாராக இருந்தாலும், ஐந்து வருட களப்பணிக்கு பிறகே, உளவு பணிகளிலும், பாதுகாப்பு பணிகளிலும், இதர அலுவலக பணிகளிலும் பணியமர்த்தப்பட்டனர். அது, மனதளவிலும், உடலளவிலும், அவர்களை பண்படுத்தும் என்பதற்காக, நடைமுறையில் இருந்து வந்தது. இப்போது, ஒரு காவலரின் ஆரம்பகால பணியின் போதே, 'கம்ப்யூட்டர் தெரியுமா, அக்கவுன்ட்ஸ் தெரியுமா...' என, அதிகாரிகள் கேட்டு, சீருடை இல்லாத அலுவலக பணிக்கு, பயன்படுத்தி கொள்கின்றனர். பின்னாளில், அவர்கள் பணியை செய்ய நேரிடும் போது, அவரின், உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்கிறது. இதனால், சிலர் விருப்ப ஓய்விலும், சிலர் வேலையை ராஜினாமா செய்து, வேறு வேலைக்கும் சென்று விடுகின்றனர்.இது தவிர, பெண் காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது, சிலர் காதல் வலையில் சிக்குகின்றனர். பணியின்போதே, மொபைலில் மணிக்கணக்கில், சக பெண் தோழியிடம் பேசுகின்றனர். காதல் ஏற்கப்படாத நிலையில், சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சொந்த வாழ்க்கையிலும், பணியின் போதும் ஏற்படும் தோல்விகளையும், ஏளனங்களையும் தாங்கிக்கொள்ளாத போலீசார், தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், காவலர்களுக்கு, 'கவுன்சிலிங்' வகுப்புகள் நடத்த வேண்டும். அவர்கள், 'ரிலாக்சாக' பணியாற்றும் வகையில், உயர் அதிகாரிகள், மன தைரியத்தை ஏற்படுத்த வேண்டும்!***சிலை வடிப்போர் வடிக்கும் கண்ணீர் துடைக்குமா, அரசு!என்.எஸ்.குழந்தைவேலு, சங்ககிரி, சேலம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், 1,800 சிற்பக்கூடங்கள் உள்ளன. இவற்றில், 4,000க்கும் மேற்பட்ட, சிற்பிகள் பணியாற்றுகின்றனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி, அவினாசியில் உள்ள சிற்பக்கூடங்களில், ௨,000க்கும் அதிகமானோர் பணியில் உள்ளனர். பழநி, மதுரை, நாமக்கல் மாவட்டம், கூலிப்பட்டி ஆகிய இடங்களில் செயல்படும் சிற்பக் கூடங்களில், ஆயிரக்கணக்கானோர் பணி புரிகின்றனர்.சிற்பங்களை செதுக்க, உடல் உழைப்பும், பார்வை திறனும் மிகவும் அவசியம். சாதாரண கற்களை, இயற்கை அழகு மிளிர தத்ரூபமாக வழங்கும், திறன் கொண்ட சிற்பிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்தபடியே வருகிறது. குறைவான ஊதியம், சுற்றுச்சூழல் பிரச்னை, போதிய ஆர்டர் இல்லாமை, தொழிலுக்கு அரசு முக்கியத்துவம் வழங்காதது போன்றவற்றால், சிற்பிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிற்பக் கலைஞர்களின் முன்னேற்றத்துக்கு, தமிழக அரசு ஏதும் செய்யவில்லை. கற்களை நகர்த்தும்போது ஏற்படும் உயிரிழப்பு, சிலைகளை வடிக்கும்போது, கல் துகள்கள் பட்டு, கண் பார்வை இழப்பு உள்ளிட்ட, பல இடர்பாடுகளை இக்கலைஞர்கள் சந்திக்கின்றனர்.ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே, இத்தொழிலில் ஈடுபட முடியும் என்பதால், ஓய்வுக்குப் பின், சிற்பக் கலைஞர்களுக்கு, எவ்வித வருமானமும் இன்றி, வாழும் சூழ்நிலை உள்ளது. எனவே, தமிழக சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு, சிற்ப கலைக்குத் தனி வாரியம் அமைப்பதுடன், கலைஞர்களுக்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழக முதல்வர், இ.பி.எஸ்., தலையிட்டு, சிற்பக்கூடம் அமைப்போருக்கு, இயந்திரங்கள் மற்றும் சிற்பக் கற்கள் வாங்க, அரசு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201905:57:26 IST Report Abuse
Bhaskaran காலமெல்லாம் பார்ப்பனரை வசைபாடிய திமுகத்தலைவர் மருத்துவர் i ராம மூர்த்தி ,நிதி ஆலோசகர் குகன் போன்றோரை நெருங்கியவர்களாக கொண்டிருந்தார் என்பதெல்லாம் வரலாறு ஐயா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201905:55:08 IST Report Abuse
Bhaskaran சிற்பக்கலையை கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் திருமணமண்டபங்களின்வாசலில் கலையழகு கொஞ்சும் இந்தப்படைப்புகளை வைக்கலாம் அதிக அளவில் ஓர்டர்கள் கிடைக்கும் அரசு அலுவலகங்களிலும் வரவேற்பறையில் வைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X