கேட்டால் கிடைக்கும்!

பதிவு செய்த நாள் : ஏப் 21, 2021 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


கேட்டால் கிடைக்கும்!


அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், மக்கள் பிரதிநிதியாவதற்கு முதல் தகுதியே, அவர் மெகா கோடீஸ்வரராக இருக்க வேண்டும் என்பது தான்.எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால், அவரிடம், 20 கோடி ரூபாய் வரை, சர்வ சாதாரணமாக செலவு செய்யும் அளவிற்கு, பண பலம்
வேண்டும். எம்.பி., பதவிக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என, நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்!தற்போது நடக்கும், ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், இதுவரையில், தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம், 1,000 கோடி ரூபாய் என்பதும்; அதில், 446.28 கோடி ரூபாய் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதும் அதிர்ச்சியான செய்தி.மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் மிக அதிகளவில் பணம் விளையாடியுள்ளது. தமிழக அரசியல்வாதிகள், எத்தனை கோடி ரூபாய் செலவு என்றாலும் பரவாயில்லை; மக்களுக்கு, 'சேவை' செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.இந்த திராவிடக் கட்சிகள், மக்களுக்கு சேவை செய்ய, வேட்பாளர்களை தேர்வு செய்வதே, அவர்களின் பணபலத்தைக் கணக்கிட்டு தான்.குறுக்கு வழியில், கோடிக்கணக்கான ரூபாய் சேர்த்திருக்கும் அந்த வேட்பாளர், எம்.எல்.ஏ., ஆனதும், ஒழுக்கமான மக்கள் சேவகராக மாறிவிடுவாரா?காமராஜர், கக்கன் போன்றோரை, இப்போது கட்சிகளே ஒதுக்கி விடும். தப்பித்தவறி யாராவது தேர்தலில் போட்டியிட்டால், அவரை மக்கள், படுதோல்வி அடைய செய்வர்.மக்களுக்கும் தெரியும், இனி நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று.நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், இரு திராவிடக் கட்சிகளும், ஒவ்வொரு தொகுதிக்கும், கோடிக்கணக்கான ரூபாய் அனுப்பி வைத்துள்ளன. அவை, கடைநிலை வாக்காளர் வரை, 300 அல்லது 500 ரூபாயாக சென்றடைந்துள்ளது.ரேஷன் கடையில் விலையில்லா அரிசி வாங்கி, உயிர் வளர்க்கும் லட்சக்கணக்கான மக்கள் வாழும் தமிழகத்தில், ஒரு வேளை உணவுக்காக, பல கோடி ரூபாய் செலவழித்து, வெளிநாடு செல்லும் அளவிற்கு, மக்கள் பிரதிநிதிகள் செல்வச் செழிப்பில் உள்ளனர்.எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்க உள்ள, 234 மெகா கோடீஸ்வரர்களிடம், நாம் கையேந்தி நிற்போம். அவர்கள், நம் வரிப்பணத்தில், நமக்கு விலையில்லா பொருட்களைக் கொடுத்து, நாட்டை கொள்ளையடிப்பர். நாம் கையேந்துவதையும், அவர்கள் கொள்ளையடிப்பதையும் நிறுத்தவே போவதில்லை!நம்மிடம் கொள்ளையடித்த பணம், கோடிக்கணக்கான ரூபாய், அரசியல்வாதிகளிடம் குவிந்துகிடக்கிறது.ஆகவே, அடுத்து வரும் தேர்தல்களில், 1,000 ரூபாய்க்கு விலை போகாமல், குறைந்தபட்சம், ஒரு லட்சம் ரூபாயாவது கேட்போம். அதை கொடுப்பதற்கும், வேட்பாளரிடம் பணம் இருக்கிறது; கேட்பதற்கு, நாம் தான் தயங்குகிறோம்.


பாதிக்கப்பட்டாராஉதயநிதி?ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சில, 1,000 ரூபாய் நோட்டுகளை காட்டி, 'இதைப் பார்த்தால், பிரதமர் மோடி மீது கொலை வெறி வரும்' என, கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசியிருக்கிறார்.மோடி தலைமையிலான அரசு, சில ஆண்டுகளுக்கு முன், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது, யார் யாருக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது?கொஞ்சம் யோசித்து பாருங்கள்...நாட்டில் உள்ள ஏழைகள், 1,000 - 500 ரூபாயை கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருக்கவில்லை. அவர்களிடம், ஒரே ஒரு, 500 ரூபாய் நோட்டு இருந்தாலே பெரிய விஷயம். எனவே பணமதிப்பிழப்பால், அந்த ஏழைகளுக்கு நஷ்டமோ, கஷ்டமோ இருந்திருக்காது. அவர்களுக்கு, பிரதமர் மோடி மீது கோபமோ, கொலை வெறியோ வராது. அடுத்து, நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவில் இருக்கும், மத்திய தர வர்க்கத்தைப் பார்ப்போம். இவர்களிடம், மாதத்தின் பாதியிலேயே, கையிருப்பு பணம் செலவழிந்து, சில, 1,000 - 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே
இருக்கும்.லட்சக்கணக்கான ரூபாய் இருந்தால் தான், 'பான் கார்டு, ஆதார் கார்டு' எல்லாம் அவசியம் என, ரிசர்வ் வங்கி அறிவித்தது. நடுத்தர வர்க்கம் கையிருப்பில் வைத்திருந்த, 2,000 ரூபாய்க்கு அதெல்லாம் தேவையில்லை என்பதால், அவர்களுக்கும் எந்த கஷ்டமும் இல்லை.அந்த, மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ள, அரசு நீண்ட அவகாசம் கொடுத்தது. பொறுமையாக இருந்து, அவர்கள் பணத்தை மாற்றிக்கொண்டனர்.ஆகவே, அவர்களுக்கும் பிரதமர் மோடி மீது கோபமோ, கொலைவெறியோ வர வாய்ப்பு இல்லை.
மூன்றாவது, பணக்கார வர்க்கம். இதில்தொழிலதிபர், அரசியல்வாதி, அரசு உயர் அதிகாரி, பெரும் வியாபாரி ஆகியோர் அடங்குவர். இப்பட்டியலில், தமிழகத்தில் மொத்தம், 20 ஆயிரம் பேர் இருப்பர்.இவர்களில் சிலர், நியாயமாக வருமான வரியை கட்டி, பணத்தை வங்கியில் வைத்திருப்பர்.அவர்கள், கையிருப்பாக சில லட்சம் ரூபாய் வைத்திருப்பர். வங்கிக்கு சென்று, தேவையான ஆவணங்களை ஒப்படைத்து, பணத்தை மாற்றியிருப்பர்.அவர்களுக்கு, சில மணி நேரம் வங்கிக்கு சென்று வந்ததை தவிர, வேறு எவ்வித நஷ்டமும், கஷ்டமும் இல்லை.ஆனால், அரசை ஏமாற்றி, பெரும் பணத்தை பதுக்கி வைத்திருந்தோருக்கு, பணத்தை மாற்றிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான, ஆவணங்களை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.அதனால், பல ஆயிரம் கோடி ரூபாய்களை பதுக்கி வைத்திருந்தோருக்கு, பண மதிப் பிழப்பு நடவடிக்கையால், அவ்வளவும் வெற்றுக் காகிதமாகப் போய் விட்டது.இப்படி ஏற்பட்ட நஷ்டத்தால், மோடி மீது கோபம் வரத்தான் செய்யும். அவரை கொல்ல, வெறி ஏற்படத் தான் செய்யும். அப்படி பாதிக்கப்பட்டோரில், உதயநிதி குடும்பமும் இருக்கலாம்.இவர் குடும்பம் பாதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த மக்களிடமும், கொலை வெறியைத் துாண்டுவது போல் பேசுவது, 'கிரிமினல்' குற்றத்திற்கு ஒப்பானது. யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan Rajappa - Thanjavur,இந்தியா
21-ஏப்-202118:51:07 IST Report Abuse
Ganesan Rajappa கணேசன் தஞ்சாவூரிலிருந்து கொரோனோவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. மீண்டும் ஒரு பொது முடக்கத்தை தமிழகமும்,தமிழக மக்களும் தாங்க முடியாத நிலையில் உள்ளனர். கொரோண தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் முயற்சி எடுத்த வேலையில் பல விதமான அறியாமையால் மக்கள் தவிப்பது உணர முடிந்தது அதை போக்க தனி நபராலோ அல்லது தனி அமைப்போ அதை சரிவர செய்ய இயலாது. அசுர வேகத்தில் பரவும் இந்த கொரோனவை விரட்ட நமது அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறைகளை சேர்ந்தவர்களும், இதற்க்கு தாமாக முன்வந்து தாங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களையும் போட்டு கொள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டுகிறோம் தேர்தலின் போது மக்களுக்கு திமுகவும், அதிமுகவும் மற்ற அரசியல் கட்சிகளும் எப்படி செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் மற்றும் YouTube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரச்சாரத்தை செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும். அரசாங்கமும் இந்த தடுப்பூசிபோட்டுக்கொள்ள ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் அவர்களை எந்த நேரத்திலும் தயார் நிலையில் மருந்து மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தஞ்சை சமூக ஆர்வலரான கணேசன் கேட்டுக்கொள்கிறேன். தற்போது நடிகர் விவேக்கின் மரணம் கண்டு எல்லோரும் அச்ச படுகின்ற வேளையில் அதற்கான ஒரு தெளிவான விளக்கத்தையும் அதனை அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபங்களும் நீக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. தொலைபேசி : 8973097753
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
21-ஏப்-202109:05:49 IST Report Abuse
venkat Iyer My brother as bank manager.He says that period many begger came this branch to bring RS 4000/ day to exchange new note.He enquired that money.If you exchange this money ,he get one day food in lunch.He arranged food,to bring the person.but,he came without money,he says to him,he had arranged another person without any trouble.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஏப்-202106:12:04 IST Report Abuse
D.Ambujavalli இருக்காதே அப்படி பழைய நோட்டுக்களை கெத்தாக தங்கள் பள்ளி, கல்லூரி ஊழியர்களுக்கு ‘போனஸ்’ என்று கொடுத்து, அவர்கள் வங்கியில் போடுவார்கள் பின், அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள் இவர்களா ஏமாறுவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X