இதிலும் இரண்டில் ஒன்று தான்!

பதிவு செய்த நாள் : ஏப் 08, 2021
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


இதிலும் இரண்டில் ஒன்று தான்!


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடுநிலைவாதிகள், '50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகம் சீர்குலைந்து விட்டது. இந்த இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான ஒரு ஆட்சி அமைய வேண்டும்' என, நினைத்தனர்.நடிகர் ரஜினி மூலம், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம் கிடைத்தது என்றாலும், அதே திரை துறையிலிருந்து, அரசியலுக்கு வந்த கமல், ஆச்சரியம் அளித்தார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல், அ.தி.மு.க., ---- தி.மு.க., சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. அதனால், இந்த தேர்தலில் பரபரப்புக் காணப்பட்டது.ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, ஆட்சியையும், கட்சியையும் திறம்பட நிர்வகித்தார், முதல்வர் இ.பி.எஸ்., அவ்வகையில் அவருக்கு, 'சபாஷ்' போடலாம். இ.பி.எஸ்., ஆட்சியில் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வை பார்க்கையில், இவர்களது குறைகள் பெரிதாகத் தெரியவில்லை.அ.தி.மு.க.,வில் அராஜகம், ரவுடியிசம், அநாகரிக பேச்சு போன்றவை இருக்காது. இவை அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் கொடி கட்டி பறக்கும்.கருணாநிதி இருக்கும் வரை, தி.மு.க., தன் கட்சி நிர்வாகிகளை நம்பியது. ஸ்டாலின், அவர்களை நம்பாமல், வட மாநிலத்தைச் சேர்ந்த, 'ஐபேக்' நிறுவனத்தை, அரசியல் ஆலோசனைக்காக, 300 கோடி ரூபாய் கொடுத்து, பணியமர்த்தினார்.'ஐபேக்' இயக்கிய நாடகத்தில், ஸ்டாலினின் கதாபாத்திரம், காமெடியனாகத் தான் இருந்தது.மேலும், அரசியல் அரிச்சுவடிக் கூட தெரியாத, தன் மகன் உதயநிதியை, வேட்பாளராக களமிறக்கியது, பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியது.
ஆனால், கூட்டணிக்கட்சிகளின் பலத்தால், தி.மு.க.,வும் தேர்தல் களத்தில் வலுவாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.துண்டு, துக்கடா கட்சிகள் இந்த தேர்தலில் கணிசமான ஓட்டுகள் வாங்குவதை விட, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஓட்டைப் பிரிக்கும் என்பது தான் உண்மை. ஒருவேளை, ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வந்திருக்கும். அல்லது அவர், 'வாய்ஸ்' கொடுத்திருக்கலாம்; எதுவுமே அவர் செய்யவில்லை.
ஆக, இந்த தேர்தல் எப்போதும் போல, இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி தான். இரண்டில் ஒன்று, ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வராது.


இரண்டில் ஒன்று காலியாகும்!அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., 1972ல், அ.தி.மு.க.,வை துவக்கிய பின், தேர்தல்தோறும், தி.மு.க., - அ.தி.மு.க., என்ற போட்டி தொடர்கதையாகி, 50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடப் போகிறது.கிரிக்கெட் மேட்ச் என்றால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளே மோதிக் கொண்டிருந்தால், பார்க்கவே, 'போர்' அடிக்காதா... இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளோடும், நம் நாடு விளையாடினால் தானே, சுவாரஸ்யமாக இருக்கும்.மக்களுக்கும், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கே ஓட்டளித்து, 'போர்' அடித்து விட்டதோ என்னவோ... கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தலை, 'டிரா'வில் முடித்தனர். அதனால், 2021 பொதுத்தேர்தல், 'பைனல் மேட்ச்' போல் இருக்கிறது. ஆம்... இத்தேர்தலில் முதல் முறையாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. அதுவும் ஜெயலலிதா, கருணாநிதி என்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் களமிறங்கிஉள்ளன.
எம்.ஜி.ஆர்., - சிவாஜிக்கு பின், ரஜினி - கமல் உருவானது போல், அடுத்த தலைமுறையாக, இ.பி.எஸ்., - ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக பொதுத்தேர்தலை சந்திக்கின்றனர்.இந்த தேர்தலில், அ.தி.மு.க., தோற்றால், கட்சி சிதறும். தி.மு.க.,வும், ஊழல் வழக்கு போட்டு, அ.தி.மு.க.,வினரை இழுக்கும்.தி.மு.க., தோற்றாலோ, மூன்றாவது முறையும் தோற்ற விரக்தியில், அக்கட்சியின் அஸ்தமன காலம் ஆரம்பிக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இது வாழ்வா, சாவா பிரச்னை.
ஆக, ஜெயிக்கும் கட்சி தான், தமிழக அரசியல் களத்தில் இருக்கும்; தோற்கும் கட்சி காணாமல் போகும். தோற்கும் கட்சி, அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்தை நிரப்ப, புதிய கட்சி மலரும். அப்போது தான், தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் மாற்றம் ஏற்படும்.


காங்கிரஸ் எப்படி வளரும்?


ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இந்த காங்கிரசாருக்கு, கட்சியை வளர்க்க தெரியவில்லை. அரசியல் கட்சிக்கு அடித்தளமே, தொண்டர்கள் தான். ஆனால் காங்கிரசில், கோஷ்டித் தலைவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, 1967ல் ஆட்சியை இழந்தது. 54 ஆண்டுகளாக, ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் எண்ணமே, காங்கிரசாருக்கு வரவில்லை என்பது, ஆச்சரியமான உண்மை.தொண்டர்களை வளர்க்க, காங்கிரஸ் தலைவர்கள், திராவிட கட்சிகளிடம் பாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களும், தலைவர்களும், காங்கிரசை வளர்க்கவே இல்லை என்பதால் தான், தேர்தல் காலத்தில், தி.மு.க.,வின் அடிமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தமிழகத்திலிருந்து, காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று, மத்தியமைச்சர் பொறுப்பில் இருந்தோர், நாட்டின் வளர்ச்சிக்கு தான் திட்டங்கள் அறிவித்தனர்; ஆனால், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை. பதவியில் இருந்த போது, அவர்கள் தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் வளராமல் போனதற்கு, இதுவும் ஒரு காரணமாகும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X