தேர்தலை சந்திப்பது ஸ்டாலினுக்கு அழகு!

பதிவு செய்த நாள் : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தேர்தலை சந்திப்பது ஸ்டாலினுக்கு அழகு!

ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: அ.தி.மு.க., ஆட்சி, 2021 வரை உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் உள்ளன. அதுவரை, அமைதி காத்து, 2021ல், 234 தொகுதிகளிலும், தி.மு.க., போட்டியிட்டு, அதில், அறுதி பெரும்பான்மை கிடைத்தால், ஸ்டாலின் முதல்வராவதில், எந்த தடையும் இல்லை.உட்கட்சி பூசலை பயன்படுத்தி, அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து, நாளையே முதல்வராவதற்கு, ஸ்டாலின் முயற்சி எடுப்பது ஏற்புடையதல்ல; ஆக்கப் பொறுத்தவர், ஆறப் பொறுக்கக் கூடாதா? இதுவரை, தி.மு.க., தோல்வியை சந்தித்ததே கிடையாதா? அது, சந்தித்த வெற்றியையும், தோல்வியையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். கடந்த, 1971ல், 230ல் போட்டியிட்டு, 183ல் வெற்றி; 1977ல், 230ல் போட்டியிட்டு, 47ல் வெற்றி; 1980ல், 112ல் போட்டியிட்டு, 37ல் வெற்றி; 1984ல், 167ல் போட்டியிட்டு, 24ல் வெற்றி; 1989ல், 202 இடங்களில் போட்டியிட்டு, 150ல் வெற்றி; 1991ல், 178 இடங்களில் போட்டியிட்டு, 176 இடங்களில் தோல்வியை தழுவி, இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.இதே போல், 1996ல், 182ல் போட்டியிட்டு, 173ல் வெற்றியும்; 2001ல், 183ல் போட்டியிட்டு, 31ல் வெற்றியும் பெற்றது. 2006ல், 132ல் போட்டியிட்டு, 96ல் வெற்றியும்; 2011ல், 119ல் போட்டியிட்டு, 23ல் வெற்றியும்; 2016ல், 134ல் போட்டியிட்டு, 89ல் வெற்றியும் பெற்றது. தி.மு.க., தொடர்ந்து, வெற்றி பெறவில் லை. பல்வேறு ஆண்டுகளில் வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது. அதுபோல், அ.தி.மு.க.,வும், இன்று லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 2014ல், 37 இடங்களில் வென்றது. எனவே, தேர்தலை நேர்மையாகச் சந்தித்து, லோக்சபாவில் வெற்றி பெற்றது போல், சட்டசபையிலும் வெற்றி பெறுவதே, ஸ்டாலினுக்கு அழகு!***


'ஹெல்மெட்' சட்டத்தில் மாற்றம் தேவை!

பெ.மோகன்ராம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும் என, நீதிமன்றம் எத்தனை முறை குட்டினாலும், தமிழக அரசு அதை பற்றியெல்லாம், கவலைப்படுவதாக தெரியவில்லை. பொதுமக்கள் மத்தியில், அது பற்றிய விழிப்புணர்வு உள்ளதா என்பதும் கேள்விக்குறி!குற்றவாளிகள், 100 பேர் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் நீதிமன்றம் முனைப்பாக இருக்கிறது. வாகன சோதனையின் போது, 'கரைவேட்டி'கள், அரசு அலுவலர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் தப்பும்போது, சாமானியர்கள் மனதில் என்ன தோன்றும்? 'காவலர்கள் ஏன் ஹெல்மெட் அணிவதில்லை?' என, நீதியரசர்கள் கேள்வி எழுப்பினால், அதில் உள்ள நியாயத்தை, இந்த நேரத்தில் கவனத்தில் கொள்வது நல்லது. குற்றவாளிகள் தப்பியபடி இருந்தால், எந்த சாமானியனுக்கு, நீதிமன்றம் மீது நம்பிக்கை வரும்?* 'சட்டம் முன் அனைவரும் சமம்' என்பதை, போலீஸ்காரர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீஸ்காரர்களுக்கு, கூடுதலாக அபராதத் தொகையை விதித்தால், குறைந்தபட்சம், அதற்கு பயந்தாவது, அனைவரும், ஹெல்மெட் அணிய முற்படுவர்* இரு சக்கர வாகனங்களை விற்கும் கம்பெனிகள், ஹெல்மெட்டையும் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என்பதை, கட்டாயமாக்க வேண்டும்* ஹெல்மெட் இன்றி செல்வோரை விட, அதை பெட்ரோல், 'டேங்க்' கவரின் மீதும் வாகனத்தின் பக்கவாட்டிலும் வைத்து, ஓட்டும் வாகன ஓட்டிகளை என்னவென்று சொல்வது...* நான்கு சக்கர வாகனங்களுக்கு உள்ளது போன்று, வாகன தணிக்கை சான்றிதழ், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறையும், இருசக்கர வாகனங்களுக்கு பெறுதல் அவசியம் என்ற சட்டம் வர வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சட்டத்தின் வழி நடக்க வேண்டும்!***


என்னாச்சு 'நைட்டிங்கேல்?'

எம்.பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர் (பணி நிறைவு), சிவகங்கையிலிருந்து எழுதுகிறார்: 'அரசு மருத்துவமனைகளை, தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தினால், கண்டிப்பாக அனைவரும் சிகிச்சை பெற வருவர்' என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனைகூறியுள்ளது. அன்று, தமிழகத்தில் வாழும், குப்பன் முதல் குபேரன் வரை, அனைவருக்கும் பயன் தரும் வகையில், 'நைட்டிங்கேல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்ற ஒன்றை, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.அதை பரிசீலிக்கும்படி, முன்னாள் முதல்வருக்கு, நான் கடிதம் அனுப்பினேன். தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் திட்ட இயக்குனர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம், 2016, ஜூலை, 26ல், எனக்கு வந்தது. 'கோரிக்கை ஏற்கப்பட்டது; மனுதாரரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து, ஆலோசனைகள், அடுத்து தொடரவிருக்கும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெ.,யின் மறைவுக்குப் பின், அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி, ஆட்சி செய்வதாக கூறிக் கொள்ளும், அ.தி.மு.க., அரசு, இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, 2016 லிருந்து, இன்று வரை, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.'நைட்டிங்கேல்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பொதுமக்கள் மாதம், ௧௦ ரூபாய் செலுத்தினால், உடல் நலம் பாதிக்கப்படும் போது, தமிழகத்தில் உள்ள எந்த மருத்துவமனையிலும், இலவசமாக மருத்துவ சிகிசை எடுத்துக் கொள்ளலாம். மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள எந்த அரசும், ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். 'குறிப்பிட்ட நோய்களுக்கு, குறிப்பிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வேண்டும்' என கட்டாயப்படுத்துவது, நடைமுறையில் பின்பற்ற முடியாது.'ஒரு தனியார் காப்பீட்டு கழகத்தின், ஊது குழலாய் அரசு செயல்பட்டு வருகிறது' என, தமிழக அரசை, நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. 'நைட்டிங்கேல்' திட்டத்தில், சிறு தொகையை, பொதுமக்கள் அரசுக்கு வழங்கி வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் பயன்படும், 'நைட்டிங்கேல்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சும், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கரும் செயல்படுத்த பரிசீலனை செய்ய வேண்டும்!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
13-ஜூன்-201906:57:08 IST Report Abuse
venkat Iyer திரு.பால கிருஷ்ணன் ஐயா தெரிவித்தது போல அரசு வழங்கும் இன்சுரன்ஸ் எல்லாம் தனியார் துறையில் மருத்துவம் பார்க்க அரசு ஆணையிட்டது வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.குறிப்பாக,தனியார் மருத்துவ மனையில் ,தங்கும் அறை பத்து நாட்களுக்கும்,மருத்துவர் அவசர சிகிச்சைக்கான செலவை மட்டும் ஏற்று கொண்டாலே பெரும் உதவியாக பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு இருக்கும்.சாதாரண பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனையில் ஒரு லட்சம் கேட்பது உண்மையில் கண்டிக்க தக்கது.இருபத்து ஐந்தாயிரம் என்று இருந்தது எல்லோரும் போட்டி போட்டுகொண்டு ஏற்றிவிட்டார்கள்.பிரசவத்திற்கு உண்மையில் அரசு தனி இன்சுரன்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
12-ஜூன்-201905:22:23 IST Report Abuse
vasumathi அரசு மருத்துவ மனைகளின் சேவை, அதனை நடத்தும் நிர்வாக அதிகாரிகளை பொறுத்தது. அவர்களுக்கு கடமை, பொறுப்பு சேவை மனப்பான்மை இல்லை என்றால் , எவ்வளவு பணம் கொட்டினாலும் ஏர் இந்தியா கதிதான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X