தமிழகத்தில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை, தி.மு.க.,வினர் பெரிய அளவில் பேசியும், விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டரில், 'இன்று தமிழக மகளிருக்கு 1,000 ரூபாய் தந்த வள்ளலே... நாளை, அனைத்து இந்திய மகளிருக்கும் உரிமைத் தொகை தரப்போகும் புதிய தலைமையே... லீடர் ஆப் இந்தியாவின் வள்ளலே...' என, முதல்வர் ஸ்டாலினை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளியிருந்தனர்.
'இண்டியா' கூட்டணியில் இன்னும் பிரதமர் வேட்பாளரை இறுதி செய்யாத நிலையில், தி.மு.க.,வினர், ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக அறிவித்து ஒட்டிய இந்த போஸ்டரால், கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
பார்வையாளர் ஒருவர், 'ஆசை யாரை விட்டது... ஒருவேளை கூட்டணியில் அதிக எம்.பி.,க்களை ஜெயிச்சிட்டா, பிரதமர் பதவியை ஸ்டாலின் கேட்க மாட்டாரா என்ன...?' என, முணுமுணுக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.