பக்க வாத்தியம் | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

பக்க வாத்தியம்

பதிவு செய்த நாள் : பிப் 18, 2019
Advertisement
பக்க வாத்தியம்

'ஒண்ணு தந்தால் கூட வாசன் கிளம்பிருவாரு!'

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, த.மா.கா., தலைவர் வாசன், திருப்பூர் வந்தார். நிருபர்கள் சந்திப்பில், 'தமிழகத்தில், நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட வேண்டும். மக்கள் மனநிலை, தொண்டர்கள் கருத்து, நிர்வாகிகள் எண்ணம் ஆகியவற்றை அறிந்து, அதில், பெரும்பான்மையான முடிவுக்கு ஏற்ப, த.மா.கா., கூட்டணி அமைக்கும். எங்கள் கட்சியின் பலம் அறிந்து, அதற்குரிய அங்கீகாரம் தரும் கூட்டணியில் இடம் பெறுவோம்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., அணியிலோ, தி.மு.க., அணியிலோ ஒரு, 'சீட்' தருகிறோம் என அழைப்பு வந்தால் கூட போதும்... வாசன் கூட்டணி பேச்சுக்கு கிளம்பிருவாரு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்ற நிருபர்கள், நமட்டு சிரிப்புடன் நகர்ந்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X