இரட்டை தலைமையில் ராமர் யாரு?

பதிவு செய்த நாள் : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இரட்டை தலைமையில் ராமர் யாரு?

'அ.தி.மு.க.,விற்கு, ஒற்றை தலைமை தேவை' என, உட்கட்சி பூசலுக்கு, 'கொளுத்தி' போட்ட, மதுரை கிழக்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான, ராஜன் செல்லப்பா, கட்சியின் தற்போதைய நிலை குறித்து விளக்க, ராமாயணம் கதை ஒன்றை சொன்னார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'ராமர், தன் வில்லை, தரையில் குத்தி, நிற்கச் செய்து, கங்கையில் குளிக்கச் சென்றார். ராமர், திரும்பி வந்து, வில்லை எடுத்தபோது, அதில், தவளை ஒன்று, காயம்பட்டு, உயிருக்கு போராடியது. அதனிடம் ராமர், 'நான் வில்லை, தரையில் குத்தும்போதே சொல்லியிருக்க வேண்டியது தானே...' என்றாராம். அதற்கு தவளை, 'எங்களுக்கு துன்பம் வரும்போது, 'ராமா... ராமா...' எனக் கூப்பிடுவோம். அந்த ராமராலேயே துன்பம் வரும்போது, நாங்கள் என்ன செய்வது?' எனக் கேட்டதாம். அது போன்ற நிலைமை தான், அ.தி.மு.க.,வில் உள்ளது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'அ.தி.மு.க.,வில், ராமர் யாருன்னு சொன்னா, நல்லாயிருக்கும்' என்றதும், சக நிருபர்கள் சிரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூன்-201918:40:51 IST Report Abuse
D.Ambujavalli ரா. செல்லப்பா மட்டுமில்லை, அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாருமே தவளைக்கூட்டம்தான் ஆளாளுக்கு கத்திக்கொண்டும் கண்டபடி அறிக்கை விட்டுக்கொண்டுமிருப்பதில்
Rate this:
Share this comment
Cancel
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
12-ஜூன்-201910:53:15 IST Report Abuse
LovelyMarees அப்போ ராஜன் செல்லப்பா தவளையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X