முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டால்...

பதிவு செய்த நாள் : ஏப் 21, 2021 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டால்...


முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டால்...


'ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து என்ன பயன்... அரசியல்வாதிகளுக்கு பயந்து சாக வேண்டியிருக்கிறதே' என, கண்ணீர் வடிக்கின்றனர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர், முதல்வராக பதவியேற்றதில் இருந்தே, அதிரடியான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
சரியாக பணியாற்றாத அரசு அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றுகிறார். திடீரென அரசு மருத்துவமனைக்குச் சென்று, டாக்டர்களை கண்காணிப்பது, ரேஷன் கடைக்குச் செல்வது என, தடாலடியாக செயல்படுகிறார்.சமீபத்தில், 'கடந்த ஒரு ஆண்டில், ஒவ்வொரு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், அரசின் திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தி உள்ளனர். அவற்றுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு என்ன' என்பதை ஆய்வு செய்து, பட்டியல் தரும்படி, தனியார் புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த நிறுவனம், ஒவ்வொரு அதிகாரிக்கும், அவர்களது செயல்பாடுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் தரும். போதிய மதிப்பெண் பெறாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஜெகன் திட்டமிட்டுள்ளார்.இதைக் கேள்விப்பட்ட மூத்த அதிகாரிகள், 'ஓய்வு பெறும் வயதில் இருக்கும் எங்களிடம், ஏன் இந்த விஷப் பரிட்சை. முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டால், என்ன வேண்டுமானாலும் செய்யலாமா' என, கொதிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
21-ஏப்-202109:01:30 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சபாஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X