அறிவியல் ஆயிரம்
'நிபா' வைரஸ் வரலாறு
பாதிக்கப்பட்ட பறவை (வவ்வால்), விலங்குகளிடம் (பன்றி, ஆடு, பூனை, குதிரை) இருந்து மனிதருக்கு 'நிபா' வைரஸ் பரவுகிறது. அவை கடித்த, எச்சில் பட்ட பழங்களை, மனிதர்கள் பயன்படுத்தும்போது பரவுகிறது. 'நிபா' வைரஸ் முதன்முதலில் மனிதருக்கு பரவியது மலேஷியாவில் தான். 1999ல் வைரஸ் பாதித்த பன்றிகள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலில் 2001ல் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டனர். தென்னிந்தியாவில் முதன்முறையாக 2018ல் கேரளாவின் கோழிக்கோட்டில் 'நிபா' வைரஸ் பரவியது.
தகவல் சுரங்கம்
உலக அமைதி தினம்
அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். உலக நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் ஐ.நா., சார்பில் செப்., 21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலக நாடுகளிடையே சண்டை சச்சரவுகளை தீர்த்து, உலகில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். 'அமைதிக்கான நடவடிக்கை; அமைதியை ஏற்படுத்த தனிநபர், குழு என அனைவருடைய பொறுப்பும் தேவை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இன பாகுபாடு என்பது சமூக கட்டமைப்பை பாதிக்கிறது. சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கிறது.