அறிவியல் ஆயிரம் | Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News

சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பதிவு செய்த நாள் : பிப் 22, 2019
Advertisement

அறிவியல் ஆயிரம்
செவ்வாயின் தினசரி வானிலை வானிலை என்பது குறிப்பிட்ட இடத்தில் 24 மணி நேரத்துக்குள் நிலவும் வளிமண்டலத்தின் நிலை. அவை வெப்பம், காற்றழுத்தம், ஈரப்பதம், மழையளவு, காற்றின் வேகம் போன்றவற்றால் வரையறுக்கப்படுகிறது. பூமியில் ஒரு இடத்தின் வானிலையை, வானிலை மையங்கள் அறிவிக்கின்றன.இந்நிலையில் செவ்வாயின் தினசரி வானிலை விபரங்களை நாசாவின் 'ஜெட் புரோபல்சன் லேபாரட்டரி'வெளியிட உள்ளது. சமீபத்தில் நாசாவால் அனுப்பப்பட்ட 'இன்சைட் ரோபோ' மூலம் இதற்கான தகவல் வெளியிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது. தகவல் சுரங்கம்
கடல்களை இணைக்கும் கால்வாய்மத்திய தரைக்கடலை, செங்கடலுடன் இணைப்பது சூயஸ் கால்வாய். இது எகிப்தில் உள்ள செயற்கை கால்வாய். இதன் நீளம் 193.3 கி.மீ. சூயஸ் கால்வாய் நிறுவனத்தால் 1859 முதல் 1869 வரை இக்கால்வாய் அமைக்கப்பட்டு, 1869 நவ., 17ல் திறக்கப்பட்டது. இதனால் ஆசியா - ஐரோப்பா இடையிலான கப்பல் போக்குவரத்தின் துாரம் குறைந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 47 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக செல்கிறது. இது எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. இக்கால்வாயின் வெற்றி, பிரான்சில் பனாமா கால்வாய் உருவாக காரணமானது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X