சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பதிவு செய்த நாள் : ஏப் 08, 2021
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
Advertisement

அறிவியல் ஆயிரம்
குளிர்ச்சி தரும் இலைவெயில் காலம் தொடங்கி விட்டதால் வெப்பம் சுட்டெரிக்கிறது. வெயிலில் உள்ள பொருட்களை தொட்டால் சுடும். ஆனால் இலை சுடுவதில்லை. அதாவது கடும் வெயிலில் இரும்பு, பித்தளை உட்பட பொருட்களை வைத்தால் விரைவில் சூடாகி விடுகிறது. ஆனால் மரம், செடியின் இலைகள் குளிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் இலைகளிலுள்ள இலை துளைகளே ஆகும். இலைத்துளைகள் மூலமாக எப்போதும் ஓரளவு நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டேயிருக்கிறது. இதன் மூலம் ஓரளவு வெப்பத்தை கவர்ந்து செல்வதால் அவை குளிர்ச்சியாக இருக்கின்றன. தகவல் சுரங்கம்
இலக்கிய விருதுஇந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரியது ஞான பீட விருது. 1965 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட 16 மொழிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப் படுகிறது. ஆண்டுதோறும் ஏதாவது ஒரு மொழிக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது. இதுவரை 58 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏழு பேர் பெண்கள். தமிழ் மொழியில் அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) மட்டுமே இவ்விருதை பெற்றுள்ளனர். 1965ல் முதன்முதலாக மலையாள எழுத்தாளர் சங்கர குரூப்புக்கு, வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X