முறைகேடு ஆவணங்களை அழிக்கும் அதிகாரிகள்!

பதிவு செய்த நாள் : ஏப் 21, 2021 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 முறைகேடு ஆவணங்களை அழிக்கும் அதிகாரிகள்!


முறைகேடு ஆவணங்களை அழிக்கும் அதிகாரிகள்!


''முதல்வர் தனிப்பிரிவு வரைக்கும் புகார் போயிருக்கு வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை பத்திங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியத்துல, கரடிவாவின்னு ஒரு ஊராட்சி இருக்குது... இங்க ஒரு பெண் தலைவர் இருக்காங்க... இவங்க, 'டம்மி'யா தான் இருக்காங்க... தி.மு.க., பிரமுகரான இவங்க
வீட்டுக்காரர் தான், ஊராட்சி நிர்வாகத்தையே நடத்துதாரு வே...

''ரியல் எஸ்டேட் தொழில் பண்றவர், வருவாய் துறையினர் ஆதரவோட, சுற்று வட்டார கிராமங்கள்ல நிறைய நிலங்களை வளைச்சு போட்டிருக்காரு... சிலரை மிரட்டியும்,
அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கிடுதாரு வே...

''யாராவது நிலத்தை தர மறுத்தா, குடிநீர், வீட்டு வரியில கோல்மால்னு மிரட்டுதாரு... இவரது அடாவடி பத்தி, முதல்வர் தனிப்பிரிவு வரைக்கும் புகார் போயிருக்கு வே...'' என்றார்,
அண்ணாச்சி.

''பகவதி கிருஷ்ணன் வர்றாரு... சுக்கு காபி போடுங்க நாயரே...'' என்ற அன்வர்பாயே, ''தண்டனையில இருந்து தப்பிட்டாரு பா...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார்...

''யாரு, எந்த தண்டனையில இருந்து தப்பிச்சா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சமீபத்துல, திருச்சி எஸ்.பி.,யா மயில்வாகனன் நியமிக்கப்பட்டாரு... நேர்மையானவர்னு பெயர் எடுத்த இவர், லாட்டரி, சட்டவிரோத மது விற்பனை, சூதாட்டம், மணல் திருட்டு மீது கடும் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவு போட்டாரு பா...
''இதை காரணம் காட்டியே, சோமரசம்பேட்டை எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ்காரர் ஒருத்தர், வழக்கமா வாங்குற மாமூலை, இரட்டிப்பாக்கி வசூல் செய்ய ஆரம்பிச்சிட்டாரு... சமீபத்துல இப்படி ஒரு லட்சம் ரூபாய் வசூல் பண்ணி, 'ரைட்டர்' ஒருத்தருடன் சேர்ந்து அமுக்க பார்த்திருக்காரு பா...
''இதுக்கு, ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் இருவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, பஞ்சாயத்து, எஸ்.பி.,க்கு போயிருக்கு... அவரும், ரைட்டரை ஆயுதப்படைக்கு மாத்திட்டாரு பா...
''ஆனா, தனிப்படை போலீஸ்காரர் மேல எந்த நடவடிக்கையும் இல்லை... அவர், வழக்கம்போல வசூல் வேட்டையில அடிச்சு ஆடிட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''செந்தில், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற குப்பண்ணா, ''ஆவணங்களை அழிக்கற பணி, ஜரூரா நடக்கறது ஓய்...'' என்றார்.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கூட்டுறவு துறையில, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மூலமா, ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி, மருந்தகம், பெட்ரோல் பங்க் எல்லாம் நடத்தறா... தீபாவளிக்கு பட்டாசு கடைகள் கூட போடுவா ஓய்...
''இதுக்கான பொருட்கள் கொள்முதல் எல்லாம், ஒப்பந்த நிறுவனங்கள் மூலமா தான் நடக்கும்... பண்டக சாலைகளை நிர்வாகம் செய்யற சில இணை பதிவாளர்கள், பொருட்கள் கொள்முதல் துவங்கி, ஊழியர்கள் இடமாறுதல் வரை, பல முறைகேடுகள் செய்யறா ஓய்...
''அடுத்த மாசம், புதிய அரசு பொறுப்பேற்க இருக்கோல்லியோ... எந்த அரசாங்கம் வந்தாலும், தங்களை வேற இடத்துக்கு துாக்கியடிச்சுடுவான்னு, முறைகேடு அதிகாரிகள் பயப்படறா...
''இதனால, தங்களது அலுவலகங்கள்ல, முக்கிய கோப்புகள்ல இருக்கற கொள்முதல் சம்பந்தமான சில விபரங்களை அழிக்கறதும், திருத்தறதுமா இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஏப்-202106:06:17 IST Report Abuse
D.Ambujavalli இவர்களின் உதவியால் பங்கு பெற்ற மேலிடங்களையும் காப்பாற்றியாக வேண்டும். அவர்கள் நழுவி விடுவார்கள், இவர்கள் கழுத்துக்குத்தான் கத்தி. அதனால்தான் ஆவணங்கள் அழிப்பில் தீவிரம் அல்லது, சம்பந்தப்பட்ட ‘பெரிய தலைகளின்’ உத்தரவும் வந்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X