'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : ஏப் 21, 2021 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் அழகிரி: கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், ஏற்கனவே, ஆக்சிஜன், 'வென்டிலேட்டர்'கள், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக, பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை காப்பாற்றும் முயற்சியில், பிரதமர் மோடி உடனடியாக ஈடுபட வேண்டும். இல்லையேல், பா.ஜ., அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
'டவுட்' தனபாலு: கொஞ்சம் மேலே பாருங்கள்; ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்புக்கு, பா.ஜ., மற்றும் பிற கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. அதுபோன்ற ஆக்கப்பூர்வமான அரசியலை செய்வதை தவிர்த்து, மக்களை மேலும் பீதிக்கு உள்ளாக்கும் வகையில் செயல்படுவதால் தான், காங்., படுபாதாளத்திற்கு போய் கொண்டிருக்கிறதோ என்ற, 'டவுட்' வருகிறது!


பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்:
அரசியல் கட்சிகளின் செயல்களால் தான், கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. எனவே, இந்த கொரோனா காலத்தில் நடைபெறும் இடைத் தேர்தலுக்கான பேரணி மற்றும் பிரசார கூட்டங்கள் ஏதும், எங்கள் கட்சி சார்பில் நடத்தப்படாது. மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம், தேர்தல் பிரசார காலத்தை குறைப்பது குறித்து யோசிக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: மிகவும் பின்தங்கிய ஒடிசாவில், நல்ல படித்த, உயர்ந்த குணம் உடைய முதல்வர் நவீன் பட்நாயக், முதல்வராக இருக்கிறார். அவரின் சீரிய நிர்வாகத்தால் தான், தொடர்ந்து, ஐந்தாவது முறையாக முதல்வராகியுள்ளார். தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டோம் என, அவர் அறிவித்திருப்பது, கொரோனா ஒழிப்பில் பிற மாநில தலைவர்களுக்கு முன்னுதாரணம் என்பதில், 'டவுட்டே' இல்லை!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
கொரோனா தொடர்பாக, உ.பி., குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள், வேதனை அளிப்பதாக உள்ளன. மக்களின் தேவைக்கு ஏற்ற மருத்துவமனைகள் இல்லை; படுக்கைகள் இல்லை; தடுப்பூசிகள் இல்லை என்ற செய்திகளில், மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசியல் உள்நோக்கம் இல்லாமல், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உதவ வேண்டும்.
'டவுட்' தனபாலு: மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுரை கூறுவது இருக்கட்டும். அரசியல் ரீதியாக கருத்து தெரிவித்து, ஏற்கனவே அல்லல் அனுபவித்து வரும், மத்திய, மாநில அரசுகளின் புண்களில் மிளகாயை பூசாதீர்கள். இதுபோன்ற இக்கட்டான நிலையில், நீங்கள் பொறுப்பில் இருந்தால், என்ன செய்திருப்பீர்கள் என நினைத்து, அரசுகளின் சுமுக செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு கொடுங்கள். இல்லையென்றால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி, எந்த காலமும் எதிர்க்கட்சியாகத் தான் இருப்பீர்கள் என்பதில், 'டவுட்டே' இல்லை!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
21-ஏப்-202117:25:34 IST Report Abuse
karutthu தலைவர் ஸ்டாலின் அவர்களே கொடைக்கானலிருந்து அறிக்கை விடாமல் சென்னைக்கு வந்து கொரோனா சம்பந்தமாக ஏதாவது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் / உதவிகள் வழங்குவதற்கு முயற்ச்சி செய்யுங்கள்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
21-ஏப்-202112:46:31 IST Report Abuse
Suppan "நீங்கள் பொறுப்பில் இருந்தால், என்ன செய்திருப்பீர்கள்"?? ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் "வாக்ஸின், மருந்துகள் வாங்குவதில் ஒரு செம பணம் பண்ணியிருப்போமே சான்ஸ் போச்சே
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
21-ஏப்-202108:02:01 IST Report Abuse
a natanasabapathy தமிழ்நாட்டிலேயே பெரும்பாலோருக்கு இந்த அழகிரி யார் என்றே தெரியாது மதுரை அழகிரியை தான் நன்கு தெரியும் இந்த லக்ஷணத்தில் இவர் தினமும் கூவிக்கொண்டு இருக்கிறார். காரோண காலத்திலும் உல்லாசம் அனுபவிக்கும் சுடலையும் தினமும் அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றி வருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X