'டவுட்' தனபாலு

பதிவு செய்த நாள் : ஜூன் 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'டவுட்' தனபாலு

மா.கம்யூ., பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தில், சட்டம்- - ஒழுங்கு மோசமாகத் தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கூடாது.டவுட் தனபாலு: சட்டம் - ஒழுங்கு சீர்கேடால், தற்போது பாதிக்கப்படுவது யாரும், உங்க கட்சியினர் இல்லை... அதனால், வேடிக்கை பார்க்கணும்னு சொல்ல வர்றீங்களா... உயிர்களை விட, உங்களின் அரசியல் தான் பெரிதோ என்ற, 'டவுட்' வருதே...!***திரிணமுல் காங்கிரஸ் பொதுச் செயலர், பார்த்தா சட்டர்ஜி: மேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்க, அரசியல் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதை, அனைத்து ஜனநாயக சக்திகளும், ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.டவுட் தனபாலு: 'மேற்கு வங்கத்தில், அரசியல் மோதல்கள் அதிகரித்து வருது... மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்துங்க'ன்னு, உள்துறை அறிவுறுத்தியது தப்பா... எதற்கெடுத்தாலும், அனைத்துக் கட்சிகளையும் துணைக்கு அழைக்குறீங்களே... இது, எவ்வளவு துாரம் நீங்க பலவீனமா இருக்கீங்க என்பதை, 'டவுட்'டே இல்லாமல் வெளிக்காட்டுதே...!***இந்திய குடியரசுக் கட்சி தலைவர், செ.கு.தமிழரசன்: தலித் இயக்கங்களை ஒருங்கிணைத்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். தலித் ஒருவரை, துணை முதல்வராக நியமிக்க வேண்டும்.டவுட் தனபாலு: பொதுவானவராக காட்டிக் கொண்டு, கமல் கட்சியோடு கூட்டணி வைத்தீங்க... எதிர்பார்த்தது கிடைக்காத விரக்தியில், ஜாதியை துாக்கிப் பிடிக்க இறங்கிட்டீங்க... அமைச்சர்களே வியந்து பார்த்து, மயங்கி விழும் அளவுக்கு, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளி வந்தீங்க... அந்த காலகட்டத்தில், இந்தத் துணை முதல்வர் கோரிக்கையை ஏன் வைக்கலை என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூன்-201918:37:49 IST Report Abuse
D.Ambujavalli ஜெயாம்மா இருந்த வரை துணை, இணை என்று வாயைத் திறந்துவிட முடியுமா? அந்தம்மா ஒன்று, மீதி எல்லா அமைச்சர்களும் பூஜ்யம் என்ற நிலை தானே இருந்தது? இப்போது எல்லாரையும் சமரசம் செய்துகொண்டால்தான் ஆட்சி நிலைக்கும் என்ற நிர்ப்பந்தம் 115 துணை முதல்வர்கள் கூடக் கேட்கலாம்
Rate this:
Share this comment
Cancel
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
12-ஜூன்-201917:49:57 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி ஆமாம்...அம்பிகா அவர்களே........அரசு அதிகாரிகள் முதல் கிராமப்புறங்களில் பணக்காரர்கள் வரை மிரட்டி பணம் பறிக்க தனது தேவைகளை பூர்த்தி செய்ய இதுவே மிக வலிமையான ஆயுதமும் கூட
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
12-ஜூன்-201906:42:06 IST Report Abuse
Ambika. K தலித் என்பது ஒரு தகுதியா ? கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X